இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்.. இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

IND-vs-NZ
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. பெங்களூரு நகரில் நகரில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் முக்கிய வீரர் விலகல் :

இதன் மூலம் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நியூஸிலாந்து அணி தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது புனே நகருக்கு சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த அவர் அங்கு ஏற்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட்ட வேளையில் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாமல் இருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கேன் வில்லியம்சன் 100 சதவீதம் உடற்பகுதி பெற்றால் மட்டுமே மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி முடியாது.. நீங்க கம்பேக் கொடுக்க இதான் ஒரே வழி.. பாபர் அசாமுக்கு சேவாக் அறிவுரை

இதன் காரணமாக தற்போது நியூசிலாந்து அணியை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement