
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாடுவது வழக்கமாகும். அந்த வகையில் இம்முறை தொடரை நடத்தும் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது.
2013இல் தோனி தலைமையில் கோப்பையை வென்ற முன்னாள் சாம்பியன் இந்தியா தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 2 முறை, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற அணிகளும் அந்தக் கோப்பைகளை வென்றுள்ளன. எனவே இம்முறை இத்தொடரின் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் தற்சமயத்தில் இருக்கும் தரமான வீரர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் 2025 சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் சொந்த மண்ணில் பாகிஸ்தானும் கோப்பையை வெல்லும் திறமையை கொண்டுள்ளதாக அவர் கணித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளைத் தாண்டி வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினம். அந்த இரண்டு நாடுகளும் கொண்டிருக்கும் தரமான வீரர்களின் தன்மையை நினைத்துப் பாருங்கள். மேலும் சமீபத்திய வருடங்களில் ஐசிசி தொடர்களில் இந்தியா ஆஸ்திரேலியா தான் அதிகமாக ஃபைனல் போட்டிகளில் வந்துள்ளன. எனவே அந்த 2 அணிகளும் எப்போதும் போட்டியைக் கொடுக்கும்”
“அவர்களைத் தவிர்த்து தற்சமயத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாடும் அணியாக பாகிஸ்தானும் உள்ளது. சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களுடைய செயல்பாடுகள் அற்புதமாக இருக்கிறது. அழுத்தம் நிறைந்த பெரிய தொடர்களில் அவர்கள் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாக இருப்பதில்லை. ஆனால் தற்போது தங்களுடைய பிரச்சனைகளை சரி செய்து கொண்டு அவர்கள் வெற்றிக்காக வரும் ஒரு அணியாக உள்ளார்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் உட்பட 5மே நாக் அவுட் தான்.. அதுல இந்தியா ஜெய்க்க ரோஹித், கோலி முக்கியம்.. கம்பீர் பேட்டி
அவர் கூறுவது போல சமீபத்தில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வீழ்த்தியது. அத்துடன் ஆஸ்திரேலியாவையும் அதனுடைய சொந்த வீழ்த்தி பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. இது போக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் வலுவான இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்றதை மறக்க முடியாது.