பாபர் அசாம் தான் கூல் ட்ரிங்ஸ் தூக்கும் வீரர் – ஆல் டைம் பாகிஸ்தான் கனவு அணியை வெளியிட்டு கலாய்த்த ஐஸ்லாந்து

Iceland Babar Azam
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் முக்கிய அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தான் கடந்த 2022ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்று மெகா வீழ்ச்சியை சந்தித்தது. அத்துடன் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்த அந்த அணி உலக அளவில் விமர்சனங்களை சந்தித்தது. போதாகுறைக்கு பெரும்பாலான போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர்களை அடித்த நொறுக்கியதும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கத் திண்டாடியதும் உலக அளவில் ரசிகர்களை கிண்டலடிக்க வைத்தது.

அதனால் வாயில் மட்டும் பேசிக் கொண்டிருந்த ரமீஷ் ராஜா தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு புதிதாக பொறுப்பேற்ற நஜாம் சேதி தலைமையில் தேர்வுக்குழு தலைவராக சாகித் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டார். அப்படி புதிதாக அமைந்த தலைமையின் கீழ் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரிலும் சுமாராகவே செயல்பட்ட பாகிஸ்தான் போராடி டிரா செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

- Advertisement -

கூல் ட்ரிங்ஸ் பாய் பாபர்:
மேலும் தார் ரோடு போல இருந்த பிட்ச்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்தது மீண்டும் அந்த அணியையும் அந்நாட்டு வாரியத்தையும் ரசிகர்கள் கிண்டலடிக்க வைத்தது. அந்த நிலைமையில் நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 9ஆம் தேதியன்று தொடங்கியது. அந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் அடங்கிய கனவு ஆல் டைம் 11 பேர் பாகிஸ்தான் அணியை கத்துக்குட்டியான ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் ஜாலியாக தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் விராட் கோலியை விட சிறந்த வீரராகவும் சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேன் ஆகியோரை விட வரலாற்றின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடும் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் கூல்ட்ரிங்க்ஸ் தூக்கும் வீரர்கள் பட்டியலில் இருப்பதாக ஐஸ்லாந்து வாரியம் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

- Advertisement -

உலககோப்பை வென்ற கேப்டன் இம்ரான் தலைமையில் சயீத் அன்வர், ஜாகிர் அப்பாஸ், இன்சமாம்-உல்-ஹக், ஜாவித் மியான்தத், முகமது யூசுப், சாகித் அப்ரிடி, மொயின் கான், வாஷிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சகலைன் முஸ்டக் என மகத்தான ஜாம்பவான்கள் வீரர்கள் தங்களுடைய கனவு பாகிஸ்தான் 11 பேர் அணியில் இருப்பதாக தெரிவித்துள்ள ஐஸ்லாந்து கூல் ட்ரிங்ஸ் தூக்கும் வீரர்களாக பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயப் மாலிக் ஆகியோர் உள்ளதாக வெளிப்படையாக அறிவித்தது அனைத்து ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதை பார்த்து மற்றொரு ஜாம்பவான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்தான் எங்கே என்று சில இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு “அவர் முன்னாள் வீரர் ரசித் லதீப்புடன் கூல்டிரிங்ஸ் தூக்கும் வீரர்களுக்கு ரிசர்வ் வீரராக” மறைமுக பட்டியலில் இருப்பதாக ஐஸ்லாந்து பதிலளித்தது. சமீப காலங்களாகவே பாகிஸ்தான் வாரியத்தையும் அதன் வீரர்களையும் ஐஸ்லாந்து இப்படி வெளிப்படையாக கலாய்ப்பது வழக்கமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 2019க்குப்பின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மனாக முன்னேறிய பாபர் அசாம் பெரும்பாலும் கத்துக்குட்டிகளுக்கு எதிராக ரன்களை குவித்து அந்த இடத்தை பெற்றதாக ரசிகர்கள் ட்விட்டரில் வாதிடுவது வழக்கமாகும்.

இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் கழற்றி விடப்படுவதால் ஓய்வு பெறுகிறீர்களா? கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த நேரடி பதில் இதோ

அத்துடன் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்படுவதும் கேப்டனாக தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இதர வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து மிடில் ஆர்டரில் விளையாடுங்கள் என்று பல ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டும் தொடர்ந்து சுயநலமாக நடந்து கொள்வதும் பாபர் அசாமை ரசிகர்கள் தொடர்ந்து கிண்டலடிக்க முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. ஆனால் ரசிகர்களையும் மிஞ்சும் வகையில் ஐஸ்லாந்து இப்படி வெளிப்படையாக கலாய்த்துள்ளது பாகிஸ்தான் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement