- Advertisement -
ஐ.பி.எல்

கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில்.. 2025 ஃபிராடு ஐபிஎல் சொதப்பல் அணியை வெளியிட்ட ஐஸ்லாந்து

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் விளையாடும் இத்தொடரில் 74 போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் பயணத்தில் சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. அதிலும் மே ஐந்தாம் தேதி 55வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லியை ஆரம்பத்திலேயே அபாரமாக பவுலிங் செய்த ஹைதராபாத் 29/5 என மடக்கியது. அதையும் தாண்டி போராடிய 20 ஓவரில் டெல்லி 133/7 ரன்கள் குவித்தது. அதை ஹைதராபாத் கண்டிப்பாக சேசிங் செய்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஃபிராடு லெவன்:

அதையும் சேர்த்து 11 போட்டிகளில் 7 புள்ளிகளை மட்டுமே பெற்ற ஹைதெராபாத் 3வது அணியாக லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அந்தப் போட்டிகிடையே 2025 ஐபிஎல் தொடரில் பெரிய சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றமான செயல்பாடுகளைக் கொடுத்த 11 வீரர்கள் கொண்ட சொதப்பல் அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இது பற்றி ட்விட்டரில் ஐஸ்லாந்து பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“ரெய்ஜாவிக் (ஐஸ்லாந்து தலைநகர்) நகரில் ஒரு மழை நாள். இன்றைய நாளில் ஐபிஎல் 2025 தொடரின் மோசடிகள் மற்றும் மோசடி செய்பவர்கள் (ஃபிராடு) அணியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, இஷான் கிசான், ரிஷப் பண்ட் (கேப்டன் – கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், கிளன் மேக்ஸ்வெல், லியம் லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், மதீஸா பதிரனா, முகமத் ஷமி. இம்பேக்ட் வீரர் முகேஷ் குமார் இல்லை” என்று பதிவிட்டுள்ளது.

- Advertisement -

கலாய்த்த ஐஸ்லாந்து:

அதாவது ஐபிஎல் தொடரில் பெரிய சம்பளத்தை வாங்கிக்கொண்டு சொதப்பும் வீரர்களை ரசிகர்கள் ட்விட்டரில் ஃபிராடு என்றழைப்பது வழக்கமாகும். அதே போல பெரிய சம்பளத்திற்கு வாங்கப்பட்டும் சொதப்பிய வீரர்களை வைத்து ஒரு அணியை வெளியிட்டு அவர்களைக் கிண்டலடித்துள்ளது. அதற்கு 27 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்டு வெறும் 142 ரன்களை 99.22 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சொதப்பிய ரிஷப் பண்ட்டை ஐஸ்லாந்து வாரியம் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்குள் வந்த 26 வயது அதிரடி வீரர்.. கடைசி நேரத்தில் அணியில் சேர்க்க என்ன காரணம்? – விவரம் இதோ

அதே போல ரவிச்சந்திரன் அஸ்வின், கிளன் மேக்ஸ்வெல், வெங்கடேஷ் ஐயர் (23.75 கோடி) உட்பட இந்த அணியில் இருக்கும் அனைவருமே மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர். ஆனால் அவர்கள் யாருமே தொடர்ச்சியாக அசத்தவில்லை. அதனால் அவர்களை வைத்து ஐஸ்லாந்து வாரியம் இப்படி ஒரு அணியை வெளியிட்டது சரியானதே என்று ஒருத்தரப்பு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -