2023 புத்தாண்டு வந்தாலும் தார் மட்டும் மாறல, பாகிஸ்தானை ஓப்பனாக கலாய்த்த நியூஸிலாந்து வீரர் – ஐஸ்லாந்து வாரியம்

Devon Conway Pak vs nz
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக 2022ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்த பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் டெஸ்ட் போட்டிகளில் தோற்ற அந்த அணி ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் பைனலில் தோல்வியையே சந்தித்தது.

அதனால் கடுமையான விமர்னங்களை சந்தித்த அந்த அணியின் வாரியத்தில் ரமீஸ் ராஜா இரவோடு இரவாக பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் தலைவர் நஜாம் சேதி மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார். அத்துடன் புதிய தேர்வு தலைவராக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி இந்த நியூசிலாந்து தொடருக்கான அணியை தேர்வு செய்தார். அவரது தேர்வில் நடைபெற்ற முதல் போட்டியில் சர்ப்ராஸ் அகமது மிகச்சிறந்த கம்பேக் கொடுத்தாலும் இதர வீரர்களின் சொதப்பலால் நியூசிலாந்திடமும் திண்டாடிய பாகிஸ்தான் கடைசி நாளில் போதிய வெளிச்சமின்மையால் தோல்வியிலிருந்து தப்பி போராடி டிரா செய்தது.

- Advertisement -

தார் ரோட்:
அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 2ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. முன்னதாக கடந்த வருடம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அமைக்கப்பட்டிருந்த பிட்ச் தார் ரோடு போல இருந்து இருந்தது பாகிஸ்தானுக்கு பின்னடைவை கொடுத்தது. குறிப்பாக அதிரடி அணுகுமுறையுடன் விளையாடிய இங்கிலாந்து பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 500, 600 போன்ற பெரிய ரன்களை குவித்து எளிதாக வென்றது. அதனால் கடுப்பான ஐசிசி ராவில்பின்டி பிட்ச் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக ஒரே வருடத்தில் 2 முறை அடுத்தடுத்த கருப்பு புள்ளிகளை வழங்கியது.

அதன் காரணமாக உலக அளவில் கிண்டல்களை சந்தித்த பாகிஸ்தான் வாரியம் 2023 புத்தாண்டில் தரமான பிட்ச்களை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த நிலைமையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மீண்டும் தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சை பார்த்து விட்டு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இறுதியில் அவர்களது கணிப்பு சரியாகவே அமைந்தது. ஏனெனில் பிளாட்டான பிட்ச்களில் கூட புதிய பந்தை ஸ்விங் செய்து வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

- Advertisement -

ஆனால் இப்போட்டியில் பிட்ச் தார் ரோடு போல இருந்ததை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே நங்கூரத்தை போட்டு சிறப்பாக பேட்டிங் செய்த டாம் லாதம் – டேவோன் கான்வே ஜோடி 134 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் டாம் லாதம் 9 பவுண்டரியுடன் 71 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் கைகோர்த்த டேவோன் கான்வே மீண்டும் அற்புதமாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 16 பவுண்டரி 1 சிக்சருடன் 122 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அதை பயன்படுத்திய பாகிஸ்தான் மாலை நேரத்தில் கேன் வில்லியம்சன் 36, ஹென்றி நிக்கோலஸ் 26, டார்ல் மிட்சேல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 0 என முக்கிய வீரர்களை சீரான இடைவெளியில் அவுட்டாக்கியது. ஆனாலும் முதல் நாள் முடிவில் 309/6 ரன்களுடன் வலுவான நிலையை எட்டியுள்ள நியூசிலாந்துக்கு களத்தில் டாம் பிளண்டல் 30*, இஷ் சோதி 11* ரன்களுடன் உள்ளனர். மொத்தத்தில் பொறுமையான வேகத்தில் விளையாடிய நியூசிலாந்தே முதல் நாளில் 300 ரன்கள் குவிக்கும் அளவுக்கு தார் ரோட் போல இருக்கும் கராச்சி மைதானத்தை பார்த்த அந்நாட்டு வீரர் மிட்சேல் மெக்லிகன் “இது ஒரு முழுமையான ரோட், பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்” என்று ட்விட்டரில் வெளிப்படையாக கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: என்னையா பித்தலாட்டமா இருக்கு? அது அவுட் இல்ல சிக்ஸர் தான், ரசிகர்களின் விவாதத்துக்கு ஐசிசி கொடுத்த பதில் இதோ

அதையும் மிஞ்சிய கத்துக்குட்டி ஐஸ்லாந்து வாரியம் தனது ட்விட்டரில் கலாய்த்துள்ளது பின்வருமாறு. “கராச்சி ரோடில் தொல்லையில்லாத மற்றொரு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப். அவர்கள் (பாகிஸ்தான்) சில சுங்கச்சாவடிகளை அறிமுகப்படுத்தி இந்த ரன்களுக்கு வரி விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. முன்னதாக இங்கிலாந்திடம் தோற்ற போது வேண்டுமானால் எங்களை அடித்து பெரிய ஆளாகங்கள் என்றும் ஐஸ்லாந்து கலாய்த்திருந்தது. இவர்களைப் போலவே நிறைய ரசிகர்களும் பாகிஸ்தானை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement