IND vs AUS : 3 ஆவது போட்டி நடைபெற்று வரும் இந்தூர் மைதானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள ஐ.சி.சி – எதற்கு தெரியுமா?

Indore-Pitch
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி நேற்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதல்நாள் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் ஒருவர் கூட 30 ரன்கள் அடிக்காமல் ஆட்டம் இழந்தது மைதானத்தில் அதிகப்படியாக இருந்த டர்ன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் மைதானத்தில் சிகப்பு மண் இருப்பதால் முதல் இரண்டு நாட்களுக்கு அதிக பவுன்ஸ் இருக்கும் என்றும் அதன் பின்னர் தான் மைதானத்தில் டர்ன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியின் முதல் நாளிலேயே பந்து 8.3 அளவு டிகிரி திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எதிர்பார்த்த அளவுகளை விட 50 சதவீதம் கூட பந்து பவுன்ஸ் ஆகவில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

Pujara

அதேபோன்று ஆஸ்திரேலியா வீரர்களும் முதல் நாளில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இப்படி ஆடுகளம் மோசமாக திரும்பியதனால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். இந்திய ஆடுகளங்களில் பொதுவாக மூன்றாவது நாளில் இருந்து தான் பந்து சுழல ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் 30-ஆவது நிமிடத்திற்குள்ளேயே பந்து சுழல ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தப் போட்டி நடக்கும் இந்தூர் மைதானத்தின் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த போட்டியை நன்கு கவனித்து வரும் ஐசிசி நடுவர் கிரிஸ் போர்ட் இந்த இந்தூர் மைதானம் மோசமாக இருப்பதாக ஐசிசி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் என்றும் இதனால் இந்த மைதானத்தின் மீது மோசமான பிட்ச் என்ற ஒரு ஸ்டாரை ஐசிசி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : இந்திய அணியின் செலக்ட்டராக சேவாக் ரெடி ஆனா அதுக்கு பிசிசிஐ அதை செய்யணும் – ஹர்பஜன் சிங் கோரிக்கை

ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டியிலும் மைதானத்தின் தன்மை அதிகளவு விவாதிக்கப்படும் விடயமாக இருந்த வேளையில் தற்போது இந்த இந்தூர் பிட்ச்சின் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிகிறது

Advertisement