இந்திய அணியின் செலக்ட்டராக சேவாக் ரெடி ஆனா அதுக்கு பிசிசிஐ அதை செய்யணும் – ஹர்பஜன் சிங் கோரிக்கை

Harbhajan Singh Virender Sehwag
- Advertisement -

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் முக்கியமான தேர்வுக்குழு தலைவர் பதவியை முன்னாள் வீரர் சேட்டன் சர்மா கடந்த வாரம் ராஜினாமா செய்தார். கடந்த சில வருடங்களாக தலைவராக செயல்பட்டு வந்த அவர் தலைமையிலான தேர்வு குழுவினர் விராட் கோலியை ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கி ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக அறிவித்தனர். மேலும் சௌரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே மோதல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சேட்டன் சர்மா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் செய்த சில தவறான தேர்வுகள் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

CHetan Sharma

- Advertisement -

அந்த நிலையில் கடந்த வருடத்தின் இறுதியில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவினர் கூண்டோடு நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் உறுப்பினர்கள் மட்டுமே நீக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் பல்டி அடித்த பிசிசிஐ மீண்டும் சேட்டன் சர்மாவை தேர்வுக்குழு தலைவராக தேர்ந்தெடுத்து உறுப்பினர்களை மட்டும் மாற்றியது. அந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கிய சேட்டன் சர்மா விராட் கோலி – கங்குலி இடையேயான மோதல், என்சிஏவில் போலி சான்றிதழ்கள் கொடுக்கப்படுவது, இந்தியாவுக்காக தேர்வாக பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தமது வீட்டுக்கு வந்தது, 100% ஃபிட்டாக இல்லாமலேயே சில வீரர்கள் ஊசிகளை போட்டுக்கொண்டு விளையாடியது போன்ற உண்மைகளை அடுக்கடுக்காக பேசினார்.

சேவாக் செலக்டர்:
அதனால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டதால் தாமாக ராஜினாமா செய்த சேட்டன் சர்மாவுக்கு பதில் தற்காலிக தேர்வுக்குழு தலைவராக எஸ்எஸ் தாஸ் செயல்பட்டு வருகிறார். முன்னதாக குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடி குறைவான அனுபவத்துடன் ரசிகர்கள் யார் என்றே தெரியாத சில முன்னாள் வீரர்கள் தான் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்வுக்குழுவில் இருப்பவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படாததே நட்சத்திர அனுபவ வீரர்கள் அந்த பதவிக்கு விண்ணப்பிக்காததற்கு காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

sehwag

எனவே வீரேந்திர சேவாக் போன்ற தரமான அனுபவமிக்க நட்சத்திரங்கள் அந்த பதவிக்கு வர வேண்டுமெனில் முதலில் பிசிசிஐ சம்பளத்தை உயர்த்த வேண்டுமென தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை வீரேந்திர சேவாக் தேர்வுக்குழு தலைவராக வர விரும்பினால் முதலில் அந்த பதவிக்கான சம்பளம் பற்றி ஆராயப்பட வேண்டும். தற்போது அந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை எனக்கு தெரியாது. ஆனால் சேவாக் போன்ற ஒருவர் வர்ணனையாளர் மற்றும் அது சம்பந்தப்பட்ட வேலைகளை செய்து அதை விட அதிகமான பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியும்”

- Advertisement -

“எனவே சேவாக் போன்ற தரமான நட்சத்திர முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் பதவியில் அமர்வதற்கு நீங்கள் (பிசிசிஐ) சற்று அதிக பணத்தை செலவழிக்க வேண்டும். ஒருவேளை அதில் நீங்கள் கஞ்சத்தனத்தை காட்டினால் ஓரிரு போட்டிகளில் ஓரிரு வருடங்கள் விளையாடி பிரபலமில்லாத முன்னாள் வீரர்கள் மட்டும் தான் கிடைப்பார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ராகுல் டிராவிட் போன்ற தரமான அனுபவமிக்க நட்சத்திரம் முன்னாள் வீரர் பயிற்சியாளராக இருக்கும் போது தேர்வுக்குழு தலைவரும் அவருக்கு நிகரானவராக இருக்க வேண்டும்”

Harbhajan

இதையும் படிங்க:IND vs AUS : முதல் நாளிலேயே இந்தூர் பிட்ச் தாறுமாறாக சுழல பிசிசிஐயின் அந்த முடிவே காரணம் – பேட்டிங் கோச் பேட்டி

“குறிப்பாக அந்த பதவியில் இருப்பவரின் பேச்சு அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். மேலும் பயிற்சியாளராக இருப்பவர்கள் எப்போதும் அணியுடன் இணைந்து அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை வகுப்பவராக இருக்க வேண்டும். அதற்கு நிகராக அணி தேர்வும் இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யாமல் போனால் பின்னர் தேர்வுக்குழு தலைவரின் பதவிக்கு மதிப்பில்லை” என்று கூறினார்.

Advertisement