துரத்தும் துரதிஷ்டம்.. 6 வெற்றிகளை பெற்றும் வெளியேறும் நிலையில் தெ.ஆ? காத்திருக்கும் இங்கிலாந்து ட்விஸ்ட்

WI RSA ENG
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குரூப் 2 பிரிவில் செமி ஃபைனல் செல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய கிரிக்கெட் அணிகளிடம் போட்டி காணப்படுகிறது. தற்சமயத்தில் குரூப் 2 புள்ளிப்பட்டியலில் 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

2 போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் ரன்ரேட் அடிப்படையில் 2, 3வது இடங்களில் உள்ளன. மறுபுறம் 2 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்து அமெரிக்கா செமி ஃபைனல் வாய்ப்பை நழுவ விட்டு கடைசி இடத்தில் உள்ளது. இந்த அணிகளில் லீக் சுற்றில் தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்ற தென்னாபிரிக்கா சூப்பர் 8 சுற்றில் 2 வெற்றிகளை பெற்று இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை.

- Advertisement -

செமி ஃபைனல் வாய்ப்பு:
ஆனால் அப்படி தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்ற தென்னாபிரிக்கா இப்போதும் செமி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. ஆம் தற்சமயத்தில் முதலிடத்தில் இருக்கும் அந்த அணி தங்களுடைய கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தால் சூப்பர் 8 சுற்றுக்கு சென்று விடும்.

ஆனால் தோல்வியை சந்தித்தால் தென்னாபிரிக்கா அப்படியே வெளியேறி விடும். ஏனெனில் அந்த அணியின் (+0.625) ரன்ரேட் வெஸ்ட் இண்டீஸை (+1.814) விட குறைவாக இருக்கிறது. மறுபுறம் தற்சமயத்தில் இங்கிலாந்து +0.412 ரன்ரேட்டை கொண்டுள்ளது. அதன் காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் குறைந்தது 10 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 6 பந்துகள் மீதம் வைத்து வென்றால் இங்கிலாந்து செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

- Advertisement -

காலம் காலமாக ஐசிசி தொடர்களில் முக்கியமான நேரத்தில் தென்னாப்பிரிக்காவை துரத்தி வரும் துரதிஷ்டம் இம்முறை ரன் ரேட் என்ற பெயரில் காத்திருக்கிறது. எனவே தென்னாப்பிரிக்கா செமி ஃபைனல் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்த வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் செமி ஃபைனல் செல்ல தங்களது கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும்.

இதையும் படிங்க: டாஸ் வங்கதேசம் ஜெயிச்சா என்ன? எங்களுக்கு வேண்டியது கிடைச்சுடுச்சு.. கேப்டன் ரோஹித் பேட்டி

நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து செமி ஃபைனல் செல்ல கடைசி போட்டியில் அமெரிக்காவை தோற்கடிப்பதுடன் தென்னாப்பிரிக்காவை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து (4 புள்ளி) நுழைந்து விடும். தென்னாப்பிரிக்காவும் (5 புள்ளிகள்) உள்ளே சென்று விடும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் (3 புள்ளிகள்) வெளியேறிவிடும்.

Advertisement