டாஸ் வங்கதேசம் ஜெயிச்சா என்ன? எங்களுக்கு வேண்டியது கிடைச்சுடுச்சு.. கேப்டன் ரோஹித் பேட்டி

Rohit Sharma Toss
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 22ஆம் தேதி ஆன்டிகுவா நகரில் 47வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை துவக்க வீரராக களமிறங்கி பெரிய அளவில் அசத்தவில்லை. எனவே இந்த போட்டியில் அவர் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டு ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதே போல இந்த போட்டியில் முகமது சிராஜ் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

- Advertisement -

டாஸ் பரவால்ல:
இருப்பினும் அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். குறிப்பாக இதுவரை தோல்வியை சந்திக்காமல் இந்தியா 4 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே வெற்றி நடை போடும் அணியில் மாற்றம் செய்யாமல் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதை விட இந்தப் போட்டியில் டாஸ் கிடைக்காததை பற்றி வருத்தப்படவில்லை என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஏனெனில் பேட்டிங்க்கு சாதகமாக தெரியும் பிட்ச்சில் தாங்களும் முதலில் பேட்டிங் செய்வதற்கே விரும்பியதாகவும் ரோகித் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். அதையே பெற்றுள்ளோம்”

- Advertisement -

“பிட்ச் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. அது சூரியன் எந்தளவுக்கு வெளியே வந்து ஸ்லோவாக மாற்றுகிறது என்பதை பொறுத்தது. இது போன்ற சூழ்நிலைகளை வேகமாக உணர்ந்து உட்படுத்திக் கொள்வது அவசியம். நாங்கள் அதே அணியுடன் விளையாடுகிறோம். எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம். மற்றவை பற்றி அதிகமாக கவலைப்படவே கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவரை பத்தி அதிகமா யோசிக்காதீங்க.. அவருக்கு எல்லாம் தெரியும்.. இந்திய வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு

வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா

Advertisement