இலங்கை கேப்டன் ஹஸரங்காவுக்கு அபராதத்துடன் அதிரடி தடை விதித்த ஐசிசி.. காரணம் என்ன

Hasaranga ICC
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறது. குறிப்பாக காரணமாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் படுமோசமான தோல்விகளை சந்தித்த இலங்கை வாரியத்தை அந்நாட்டு அரசு கலைப்பதாக அறிவித்தது. அப்போது விதிமுறையை மீறி அரசாங்கம் தலையிட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை விளையாடுவதற்கு தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்தது.

இருப்பினும் தற்போது அந்த பிரச்சினைகள் முடிந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கியுள்ள இலங்கை சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தம்புலாவில் பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 210 ரன்களை துரத்திய இலங்கைக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

ஐசிசி தடை:
வபாஃடர் மொமண்ட் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்த கமிண்டு மெண்டிஸ் வெற்றிக்கு போராடினார். அப்போது நான்காவது பந்தை பவுலர் இடுப்புக்கு மேலே பீமராக வீசியும் நடுவர் நோ-பால் கொடுக்கவில்லை. கடைசியில் அது 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் கோபமான இலங்கை கேப்டன் வணிந்து ஹஸரங்கா போட்டி முடிந்ததும் நியாயமற்ற தீர்ப்பை வழங்கிய நடுவர் லிண்டன் ஹனிபலுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டியதாக தெரிகிறது. அது போக இது போன்ற அம்பயர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்தவர்கள் அல்ல என்று இலங்கை கேப்டன் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

ஆனால் பொதுவாக நடுவர்கள் வழங்கும் தீர்ப்புக்கு எதிராக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசுவது அடிப்படை விதிமுறைக்கு எதிரானதாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்பயருடன் சண்டை போட்டதுடன் அவர் அம்பயரிங் செய்வதற்கு லாய்க்கி இல்லாதவர் என்ற வகையில் ஹஸரங்கா பொதுவெளியில் விமர்சித்தார். இந்நிலையில் நடுவருக்கு எதிராக பேசிய ஹசரங்காவுக்கு 3 கருப்பு புள்ளிகள் மற்றும் அப்போட்டியின் 50% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இரண்டாம் நாள் ஆட்டத்தில் அம்பயர் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் – என்ன நடந்தது?

மேலும் கடந்த 24 மாதத்தில் ஏற்கனவே இரண்டு கருப்பு புள்ளிகளை பெற்றிருந்த ஹஸரங்கா இதையும் சேர்த்து மொத்தம் 5 புள்ளிகளை பெற்றுள்ளார். அதன் காரணமாக அடுத்த 2 டி20 அல்லது 2 ஒருநாள் அல்லது 1 டெஸ்ட் போட்டியில் விளையாட ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் வங்கதேசத்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அவர் விளையாட முடியாது. அத்துடன் அதே போட்டியில் நடுவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர் ரஹமனுல்லா குர்பாஸ்க்கு 15% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement