2021 ஆம் ஆண்டின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் இவர்தான். ஐ.சி.சி தேர்வு செய்த அந்த வீரர் – யார் தெரியுமா?

Shaheen-afridi
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் அணிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள் மற்றும் அணிகள் என அனைத்து விவரங்களையும் வெளியிட்டு கௌரவிக்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளையும் அதில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களையும் கௌரவிக்கும் விதமாக அந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Pak

- Advertisement -

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது மிகப்பெரிய அளவில் பெரிய வீரராக உருவெடுத்து இருக்கும் அவர் அறிமுகமான போது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் துவக்க வீரராக மாறியதில் இருந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு 29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 73.66 சராசரியுடன் 1326 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதோடு விக்கெட் கீப்பிங்கிலும் அவர் 24 வீரர்களை ஆட்டமிழக்க வைத்துள்ளார்.

rizwan 2

இதன் காரணமாக அவருக்கு 2021 ஆம் ஆண்டின் சிறந்த t20 வீரர் என்ற பட்டத்தை வழங்கி அந்த கௌரவத்தை ஐசிசி வழங்கி உள்ளது. இந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்த வேளையில் ஐசிசி-யும் அவருக்கு இந்த கௌரவத்தை வழங்கி உள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தேசிய கீதம் ஒலிக்கும் போது இப்படியா பண்ணுவீங்க. விராட் கோலியின் செயலால் – கோபமடைந்த ரசிகர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முஹம்மது ரிஸ்வான் மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement