கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பல்வேறு சிக்கல்களை கடந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்திலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி நடைபெற்று விட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருட இறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஒருநாள் தொடர் நடைபெற இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இத்தனை பிரச்சனைகள் இருக்கும் வேளையில் ஐசிசி அறிவித்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடக்குமா ? என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஐசிசி கண்டிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும் என்றும் 2011 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியும் நடக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதை நாங்கள் கண்டிப்பாக உறுதி செய்கிறோம். அதனை நோக்கி பயணித்து வருகிறோம் எப்படி தற்போது புள்ளிகளை பகிர்ந்து கொடுப்பது தள்ளி வைக்கப்பட்ட போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஐசிசி அறிவித்திருக்கிறது.
தற்போது வரை முடிந்துள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் புள்ளி பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 292 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்ற இந்திய அணி முழு உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் சுவாரசியம் குறையக் கூடாது என்பதற்காகவும் டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் ரசிக்க வேண்டும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்ட இந்த தொடரானது இதுவரை சிறப்பாகவே நடந்து முடிந்துள்ளது அதுமட்டுமின்றி இனியும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருக்க வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்கள் தங்களது ஆசையை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.