2007-ல் டி20 உலகக்கோப்பை நாயகன். 2020-ல் கொரோனா பாதிப்பில் போலீசாக இன்று மக்கள் நாயகன் – இவரை யார் என்று தெரிகிறதா ?

joginder
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் ஏகப்பட்ட பாதிப்புகளை சீனாவில் ஏற்பட்டு அதன் பிறகு ஒவ்வொரு நாடுகளாக பரவ தொடங்கியது. இந்த கொடிய வைரஸ் காற்றின் மூலமாக பரவும் தன்மை கொண்டதால் உலகெங்கிலும் பரவி தனது கோரத்தாண்டவத்தை காண்பித்து வருகிறது. அதன் வகையில் இந்தியாவும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு தப்பவில்லை.

t20

- Advertisement -

இந்தியாவிலும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உடனடியாக இந்திய அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதித்தது.

அதனைத் தொடர்ந்து மக்கள் தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் இந்த பாதிப்பின் காரணமாக ஏற்படும் நிதிப் பற்றாக் குறையாக பலரும் முன்வந்து தாங்களாக நிதி உதவி அளித்து வருகின்றனர். நிலையில் தற்போது இந்தியா முழுவதும் போலீஸ்காரர்கள் மக்களின் நன்மைக்காக இரவும் பகலும் அயராது பாதுகாத்து வருகின்றனர்.

Joginder 1

மேலும் வெளியில் பொது மக்கள் வெளியில் வரவும் அனுமதிக்கப்படுவதில்லை. காவல் துறையினர் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகித்தார்.

- Advertisement -

இந்தியா கோப்பையை வென்ற அந்த கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு டி20 கோப்பையை பெற்றுத் தந்து ஓவர் நைட்டில் ஹீரோவான இவர் அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஹரியானா மாநிலத்தில் விளையாட்டு பிரிவில் மூலமாக ஹரியானா மாநிலத்தின் டெபுட்டி போலீஸ் சூப்ரண்ட் அதிகாரியாக நியமனம் ஆனார். தற்போது பெரும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்காக அவர் சாலையில் இறங்கி அதிரடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது இந்த பணி செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஐ.சி.சி 2007ஆம் ஆண்டு டி20 ஹீரோ இன்று நிஜ ஹீரோவாக மாறி உள்ளார் என்று பதிவிட்டு உள்ளது. ஐசிசியின் இந்த பதிவினை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement