டி20 உலகக்கோப்பை : மழைகாரணமாக ஒரேநாளில் கைவிடப்பட்ட 2 ஆட்டங்கள் – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

AUSvsENG
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த வேளையில் தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாள்தோறும் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கை இந்த டி20 உலககோப்பை தொடரானது அளித்து வருகிறது.

AUS vs ENG 1

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருந்த இரண்டு ஆட்டங்கள் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மழையில் இது போன்ற ஆட்டங்கள் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படி மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் எவ்வாறு புள்ளிகள் வழங்கப்படும்? அரையிறுதிக்கான வாய்ப்பு எப்படி மாறும் என்பது குறித்து எல்லாம் பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றன.

Rain

அந்த வகையில் இன்று மதியம் 1:30 மணிக்கு நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக icc ஏற்கனவே அறிவித்திருந்த விதியின்படி போட்டி மழை காரணமாக நடத்தப்பட முடியாமல் போனதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டது.

- Advertisement -

அதேபோன்று இன்று காலை நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால் அவ்விரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : அவ்ளோ சூப்பராலாம் ஆடல. இன்னும் 2 குறைகள் இருக்கு. இந்திய அணியை எச்சரித்த – கபில் தேவ்

இப்படி இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் இனி வரப்போகும் ஆட்டங்களும் இதேபோன்று பாதிக்கப்படுமாயின் அரையிறுதிக்கு தகுதிபெற நினைக்கும் அணிகள் இனிநடைபெற உள்ள அனைத்து ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement