WTC Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும் – ரூல்ஸ் சொல்வது என்ன?

IND-vs-AUS
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் ஒரு சில தினங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதன்படி வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் காமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதவிருக்கின்றன.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் இவ்விரு அணிகளைச் சார்ந்த வீரர்களும் இங்கிலாந்து சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் ரிசர்வ் டே அன்று நடைபெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் போட்டி ஒரு வழியாக சிறப்பாக முடிவடைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Rain

அதேபோன்று தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி டிரா ஆனாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டாலோ இரு அணிகளுமே சாம்பியன் என்று இரு அணிகளுக்கும் சாம்பியன் பட்டம் பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னா மனுஷன்யா, ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சேவாக் செய்த மாபெரும் உதவி – குவியும் பாராட்டுக்கள்

ஒருவேளை இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கட்டாயம் ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும். அப்படி ரிசர்வ் டேவிலும் போட்டி மீண்டும் மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுமே வெற்றியாளர்கள் என்று முடிவு அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என்று விதிமுறை கூறுகிறது. அதனால் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டாலோ இரு அணிகளுமே வெற்றியாளர்கள் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement