என்னா மனுஷன்யா, ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சேவாக் செய்த மாபெரும் உதவி – குவியும் பாராட்டுக்கள்

Virender Sehwag
- Advertisement -

ஒடிசா மாநிலம் பாலசோர் எனும் இடத்தில் ஜூன் 2ஆம் தேதி நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அந்த ஊரின் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வண்டி மீது பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக மோதியதால் ஏற்பட்ட அந்த மிகப்பெரிய விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயத்தை சந்தித்துக்காக தெரிய வரும் நிலையில் சுமார் 300 பேர் இயற்கை எழுதியதாக தெரிய வருவது இந்தியாவில் இருக்கும் அனைவரையும் சோகமடையை வைத்துள்ளது. அந்த விபத்துக்கு முக்கியமான இடத்தில் சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம் என்று முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது.

இத்தனைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தாக பார்க்கப்படும் ரயில்வே துறையில் அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள்கள் பயணிப்பது வழக்கமாகும். அதனால் மிகவும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டிய அந்தத் துறையில் ஏதோ ஒரு தவறு நேர்ந்ததால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது உண்மையாகவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் அந்த நிகழ்வை புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பார்க்கும் ஒவ்வொருவரின் இந்தியர்களின் நெஞ்சமும் உடைந்து போகிறது என்று சொல்லலாம்.

- Advertisement -

சேவாக் உதவி:
அந்தளவுக்கு மோசமான அந்த விபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்த்து காயமடைந்த அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்த நிலையில் ரயில்வே அமைச்சர் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. மேலும் பல நட்சத்திரங்களும் பிரபலங்களும் பாதிப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த நிலையில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமும் தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உட்பட ஏராளமான முன்னாள் இந்நாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்தி ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் பாதித்த அனைவருக்கும் தன்னுடைய ஆறுதலை தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் கிரிக்கெட் வீரேந்திர சேவாக் அந்த குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு தன்னுடைய “சேவாக் இன்டர்நேஷனல்” பள்ளியில் இலவச கல்வியை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த மோசமான நிகழ்வில் விரைவாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியவர்களுக்கும் ரத்ததானம் கொடுத்தவர்களுக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள அவர் தருணத்தில் அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த புகைப்படம் நம்மை நீண்ட நாட்கள் ஆட்டி படைக்கும். இந்த மோசமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக் கொள்வது தான் என்னால் செய்யக்கூடிய உதவியாகும். இந்த சமயத்தில் சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் அத்தகைய குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன்”

“மேலும் மீட்பு பணிகளில் முன்னணியில் இருந்த அனைத்து துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் தன்னார்வ ரத்த தானம் செய்யும் மருத்துவக்குழு மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நாம் ஒன்றாக இருப்போம்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்து “என்னா மனுஷன்யா” என்று பாராட்ட வைத்துள்ளது. ஏனெனில் சச்சின் முதல் விராட் கோலி உட்பட அனைத்து நட்சத்திர வீரர்களும் ஆறுதல் தான் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காலில் விழுந்து வணங்கிய ருதுராஜின் மனைவியிடம் அன்பு கட்டளையிட்ட தோனி – தெறித்து ஓடிய ருதுராஜ் கெய்க்வாட்

ஆனால் அவர்கள் அனைவரையும் மிஞ்சியுள்ள சேவாக் பணம், பொருள் போன்ற அனைத்து உதவிகளை விட மிகவும் விலைமதிப்பற்ற அழிக்க முடியாத கல்வியை இந்தியாவின் வருங்காலமாக கருதப்படும் குழந்தை செல்வங்களுக்கு இலவசமாக தருவதற்கு கரம் நீட்டி உள்ளது உண்மையாகவே கைதட்டி பாராட்டுவதற்கு தகுதியானதாகும். ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டாலும் டெல்லியில் தமது பெயரில் பள்ளியை நடத்தி வரும் சேவாக் இந்த மோசமான தருணத்தில் பாதித்தவர்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தது அனைவரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement