காலில் விழுந்து வணங்கிய ருதுராஜின் மனைவியிடம் அன்பு கட்டளையிட்ட தோனி – தெறித்து ஓடிய ருதுராஜ் கெய்க்வாட்

Utkarsha
Advertisement

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடந்த ஆண்டு லீக் சுற்று போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இம்முறை மீண்டு வந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முக்கியமான இந்த மாபெரும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முடிந்ததும் அரங்கம் முழுவதுமே சென்னை அணியின் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தை எழுப்பினர். அதோடு தோனிக்காக மட்டுமே இந்த கோப்பையை கைப்பற்றினோம் என சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானம் முழுவதும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி கருத்துக்களையும் பகிர்ந்து வந்தனர்.

- Advertisement -

அதோடு போட்டி முடிந்ததும் சி.எஸ்.கே வீரர்களைச் சேர்ந்த குடும்பத்தினர், அணி நிர்வாகிகள், சிஎஸ்கே அணியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் என அனைவரும் மைதானத்தில் வந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு கோப்பையுடனும் தோனியிடனும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.

அதிலும் குறிப்பாக வீரர்களின் குடும்பத்தார் தொடர்ச்சியாக தோனியிடம் புகைப்படம் எடுத்தவரே இருந்தனர். அந்த வகையில் சென்னை அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தனது வருங்கால மனைவி உட்கர்ஷா பவாருவுடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

அப்போது உட்கர்ஷா பவார் தோனியை சந்தித்து கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மரியாதை நிமித்தமாக அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது அவரை ஆசீர்வதித்து தூக்கிவிட்ட தோனி அவரது வருங்கால கணவர் ருதுராஜின் காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்குமாறு அன்பு கட்டளை இட்டார்.

இதையும் படிங்க : ப்ளாங்க் செக்ல கோடிகள் கொடுத்தாங்க ஆனா அப்பாவுக்கு செய்த சாத்தியத்தால் வேணாம்னு சொல்லிட்டேன் – சச்சின் நெகிழ்ச்சி

தோனி இப்படி கூறியதை எதிர்பாராத ருதுராஜும் அங்கிருந்து நகர்ந்து ஓடிவிட்டார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உட்கர்ஷா பவார் ஆகியோர் மகாராஷ்டிரா அணிக்காக இருவருமே கிரிக்கெட் விளையாடிய வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு காதலர்களாக இருந்துவந்த இந்த ஜோடி நேற்று ஜூன் 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement