பந்துபடும் முன்பாகவே ஸ்டம்பை தட்டிய தினேஷ் கார்த்திக். ஆனாலும் அவுட் குடுத்த அம்பயர் – ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன?

Maxwell
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது துவக்க வீரர் கேமரூன் கிரீனின் அதிரடி காரணமாக 3.5 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. பின்னர் கிரீன் 52 ரன்களிலும், பின்ச் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற ஆஸ்திரேலியா அணியானது பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் குவித்திருந்தது.

Maxwell 1

- Advertisement -

அந்த நிலையில் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஆட்டத்தின் 7 ஓவரின் 4 ஆவது பந்தில் மேக்ஸ்வெல் இரண்டு ரன் ஓட முயற்சித்த போது அக்சர் பட்டேல் வீசிய பந்தில் ரன் அவுட் ஆனார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த இந்த ரன் அவுட் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஏனெனில் பந்தை ரீப்ளே செய்து பார்க்கும் போது பந்து ஸ்டம்பை அடிக்கும் முன்பாகவே தினேஷ் கார்த்திக்கின் கை ஸ்டம்பில் பட்டு ஒரு பைல்ஸ் நழுவியது. இதன் காரணமாக மேக்ஸ்வெல் நாட் அவுட் என்றே கருதினார். ஆனால் ஒரு பைல்ஸ் மட்டும் நகர்ந்த வேளையில் பந்து மறுபுறம் இருந்த பைல்ஸ்ஸில் சரியாகப்பட்டது.

Dinesh-Karthik

இதனால் மூன்றாம் நடுவர் அதனை பரிசோதித்து விட்டு மேக்ஸ்வெல் அவுட் என்று அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேக்ஸ்வெல் களத்தில் இருந்து கோபமாக வார்த்தைகளை உதிர்த்தவாறு மைதானத்தில் இருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். இந்நிலையில் இப்படி பந்துபடும் முன்பாகவே தினேஷ் கார்த்திக் ஸ்டம்பை தட்டி விட்டாலும் அம்பயர் ஏன் அவுட் கொடுத்தார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஐசிசி இதற்கு கூறும் விதிமுறை யாதெனில் : ஒரு பைல்ஸ் நகர்ந்த வேளையில் மற்றொருபுறம் பைல்ஸ் நகராமல் இருந்துள்ளது. அதேவேளையில் பீல்டர் த்ரோ செய்த அந்த பந்து சரியாக விழாமல் இருந்த பைல்ஸ் மீது பட்டது அதன் பின்னரே இரண்டாவது பைல்ஸ் விழுந்தது. அப்போது பேட்ஸ்மேன் கிரீஸிற்கு வெளியே இருந்தால் அவுட் என்றே அர்த்தம் இதன் காரணமாகவே மேக்ஸ்வெல் அவுட் என்று அறிவிக்கப்பட்டார் என்று ஐ.சி.சி விதிமுறை கூறுகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : இவர வெச்சுகிட்டு எப்டி உ.கோ வெல்லப்போறோம் – மோசமான உலகசாதனை படைத்த பவுலரால் இந்திய ரசிகர்கள் கவலை

ஒருவேளை தினேஷ் கார்த்திக் கைபட்டு இரண்டு பைல்ஸ்களுமே கீழே விழுந்து இருந்தால் அவர் பந்தை பிடித்து ஒரு ஸ்டெம்பை பிடுங்கி இருந்தால் மட்டுமே மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Advertisement