IND vs AUS : இவர வெச்சுகிட்டு எப்டி உ.கோ வெல்லப்போறோம் – மோசமான உலகசாதனை படைத்த பவுலரால் இந்திய ரசிகர்கள் கவலை

Harshal-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பி தோற்ற இந்தியா 8 ஓவர்களாக நாக்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவின் சரியான பந்து வீச்சில் 200 ரன்களை தொட முடியாமல் 20 ஓவர்களில் 186/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 7 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (21) ரன்கள் எடுக்க இறுதியில் டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 54 (27) ரன்களும் டேனியல் சாம்ஸ் 28* (20) ரன்களும் சேர்த்தனர். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 187 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 1, ரோஹித் சர்மா 17 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 30/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்றது. இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு அற்புதமாக பேட்டிங் செய்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 69 (48) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த விராட் கோலியும் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 63 (48) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25* (16) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்ததால் 187/4 ரன்கள் எடுத்த இந்தியா கச்சிதமான வெற்றி பெற்றது. அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக எங்களை வீழ்த்த முடியாது என உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது.

முன்னதாக இந்த தொடரில் காயத்திலிருந்து திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல் முதல் போட்டியிலேயே 49 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அத்துடன் 2வது போட்டியிலும் 2 ஓவரில் 32 ரன்களை வாரி வழங்கிய அவர் நேற்றைய போட்டியிலும் 2 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து சுமாராகவே செயல்பட்டார். சமீபத்திய ஆசிய கோப்பையில் இவர் இல்லாததால் தோல்வியடைந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த தொடரில் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்து வேதனையடைகிறார்கள்.

- Advertisement -

பொதுவாகவே காயத்திலிருந்து திரும்பும் வீரர்கள் சுமாராக செயல்படுவது வழக்கம் என்றாலும் இவர் காயத்திற்கு முன்பிருந்தே சுமாராக செயல்பட்டு வருகிறார். ஆம் இந்த வருடம் இது வரை 18 போட்டிகளில் பங்கேற்ற அவர் 20 விக்கெட்டுகளை எடுத்தாலும் 530 ரன்களை 9.27 என்ற மோசமான எக்கனாமியில் வாரி வழங்கி வருகிறார். அதைவிட இந்த வருடம் 33 சிக்ஸர்களை கொடுத்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை வழங்கிய பவுலர் என்று ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பாவை முந்தி மோசமான புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்ஷல் படேல் : 33* (2022)
2. ஆடம் ஜாம்பா : 32 (2021)
3. ஆண்ட்ரூ டை : 27 (2018)
4. ஷாஹீன் அப்ரிடி : 24 (2021)

இத்தனைக்கும் இந்த வருடம் காயத்தால் சில முக்கிய போட்டிகளை தவற விட்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களிலேயே இப்படி ஒரு மோசமான சாதனை படைத்துள்ள இவர் எஞ்சிய 3 மாதங்களில் விளையாடினால் நிச்சயம் 50 கொடுத்து மேலும் ஒரு மோசமான உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அதைவிட டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் களமிறங்கும் 3வது வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் இவர் இப்படி மோசமாக பந்துவீசி ரன்களையும் சிக்ஸர்களையும் மெஷினாக வாரி வழங்குவதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இவரை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா எப்படி உலக கோப்பையை வெல்லப் போகிறதோ என்ற கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

அத்துடன் 120 – 130 வேகத்தில் மட்டுமே பந்து வீசக்கூடிய இவரது வேகத்தில் பிளாட்டான பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் சரமாரியாக அடிக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெரும்பாலான மைதானங்களில் 130 – 140 கி.மீ வேகத்தில் பந்து வீசினால் மட்டுமே ஓரளவு சமாளிக்க முடியும் என்பதால் அங்கு இவர் நிச்சயம் தடுமாறுவார் என்றும் ரசிகர்கள் கவலையடைகிறார்கள்.

Advertisement