IND vs PAK : ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால் என்னவாகும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

INDvsPAK-1
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்வரும் 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி நாளான அன்றைய தினத்தில் மெல்போர்ன் நகரில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அறிக்கை வெளியானதால் தற்போது இந்த போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.

INDvsPAK

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி திட்டமிடப்பட்டபடி நடைபெற முடியாமல் ரத்தானால் என்ன ஆகும்? மழையால் போட்டி கைவிடப்பட்டால் என்ன ஆகும்? அதற்கு ஐசிசி கூறும் விதிமுறைகள் என்ன என்பதனை இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இந்த போட்டியானது வர்த்தக ரீதியில் பெரிய அளவில் ஐசிசிக்கு வருமானத்தை அளிக்கும் என்பதனால் நிச்சயம் இந்த போட்டியை எப்படியாவது நடத்த ஐசிசி முயற்சிக்கும். குறைந்தபட்சம் தலா 5 ஓவர்களாவது நிர்ணயிக்கப்பட்டு இந்த போட்டியினை நடத்த ஐசிசி முடிவு செய்யும்.

Rain

அப்படி இல்லையெனில் ஒருவேளை ஒரு அணி பேட்டிங் செய்து முழு இன்னிங்ஸ்ஸையும் விளையாடிய பின்னர் மழை பெய்தால் அடுத்ததாக பேட்டிங் செய்யும் அணி ஆறு ஓவருக்கு மேல் பிடித்து விட்டால் டக் வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு சில வழிகளில் போட்டியை நடத்த ஐசிசி முயற்சிக்கும். ஆனால் மழை காரணமாக ஒரு பந்து கூட போடப்படாமல் போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி ஒரு புள்ளி வழங்கப்பட்டால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்குமே அது அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான நெருக்கடியை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : தமிழக வீரர்களுக்கு இடமிருக்கா? பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவன் இதுதான் – கம்பீர் அறிவிப்பு

எது எப்படி இருந்தாலும் ஐசிசி நிச்சயம் இந்த போட்டியை 5 ஓவர்களாவது நடத்த முயற்சிக்கும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement