தமிழக வீரர்களுக்கு இடமிருக்கா? பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவன் இதுதான் – கம்பீர் அறிவிப்பு

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறுகிறது. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக எல்லைப் பிரச்சனை காரணமாக ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வரும் நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவைத் தோற்கடித்த பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. அதனால் அவமானத் தோல்வியை சந்தித்த இந்தியா அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்றாலும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மண்ணைக் கவ்வி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

IND vs PAk Rahul Hardik Pandya

- Advertisement -

எனவே அந்த வரலாற்று தோல்விகளுக்கு இம்முறை மெல்போர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு அறிவிக்கப்பட்ட 15 வீரர்களில் தரமான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது. அதனால் பரம எதிரிக்கு எதிராக விளையாடப் போகும் 11 பேர் உத்தேச இந்திய அணியைப் பற்றி ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கணித்து வருகிறார்கள்.

கம்பீரின் லெவன்:
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தன்னுடைய 11 பேர் உத்தேச இந்திய அணியை வெளியிட்டுள்ளார். இது பற்றி ஜீ நியூஸ் சேனலில் பேசிய அவர் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆகியோரை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். மேலும் 3வது இடத்தில் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியும் 4வது இடத்தில் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் உலகின் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் அடுத்ததாக அவர் தேர்வு செய்துள்ளது தான் அனைவருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.

DK and Pant

ஆம் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக விக்கெட் கீப்பராக தமிழகத்தின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக்கை கற்றிவிட்டுள்ள அவர் அறிமுகமானது முதல் இதுவரை 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒருமுறை கூட மனதில் நிற்கும் அளவுக்கு செயல்பாடுகளை வெளிப்படுத்தாத ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த அவர் 10 – 12 பந்துகளை எதிர்கொள்வதற்காக மட்டும் கார்த்திக்கை தேர்வு செய்து ஒரு இடத்தை வீணடிக்காமல் இந்த தேர்வினை செய்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அந்த 10 – 12 பந்துகளை எதிர்கொண்டு 15 – 20 எடுக்காத காரணத்தால் தான் சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியா மண்ணை கவ்வியது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து 6, 7 ஆகிய இடங்களில் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பினிஷர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தேர்வு செய்துள்ள அவர் முதன்மை ஸ்பின்னராக சுமாரான பார்மில் இருக்கும் சஹாலை தேர்வு செய்து மற்றொரு தமிழகத்தின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கவில்லை. கடந்த உலக கோப்பையில் ஆச்சரியப்படும் வகையில் 4 வருடம் கழித்து தேர்வாகி கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு வரும் அஷ்வின் சமீப காலங்களில் பேட்டிங்கில் கணிசமான ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

Gambhir

மேலும் 2015 உலகக் கோப்பை உட்பட ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய ஏராளமான அனுபவத்தையும் அஸ்வின் கொண்டுள்ளார். மறுபுறம் சஹாலுக்கு பேட்டிங் செய்ய தெரியாது என்பதுடன் தற்சமயத்தில் சுமாரான பார்மில் இருந்தும் அவரை கம்பீர் தேர்வு செய்துள்ளார். அதைவிட பும்ராவுக்கு பதிலாக தேர்வாகி பயிற்சி போட்டியில் வெற்றி பெற வைத்த முகமது ஷமிக்கு டாட்டா காட்டியுள்ள அவர் ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் ஆகிய மித வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார்.

கெளதம் கம்பீரின் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய உத்தேச 11 பேர் கிரிக்கெட் அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வென்ற சஹால், அர்ஷிதீப் சிங்

Advertisement