- Advertisement -
உலக கிரிக்கெட்

சச்சினை விட பெரிய வீரர் பென் ஸ்டோக்ஸ் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி.சி – விவரம் இதோ

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிகப்பெரிய காரணமாக அமைந்தார். மேலும் அந்த போட்டியின் ஆல்-ரவுண்டராக அசத்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இந்திய அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் ஸ்டோக்ஸுக்கு அளித்தார். இந்தப்படத்தை ஐசிசி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த வீரர் உடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என்று பதிவிட்டு உள்ளது.

- Advertisement -

உடனே இதற்கு இந்தப் பதிவினை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஏனெனில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்கு உதவினார். ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கரை விட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா ? அவருக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா ? என்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

மேலும் சச்சினை விட இவர் பெரிய வீரர் கிடையாது. எனவே சச்சின்னுக்கான மரியாதையை நீங்கள் தர வேண்டும் என்றும் ஐசிசி-க்கு எதிராக ரசிகர்கள் பதிவினை செய்து வருகின்றனர். ஏனெனில் 1990களில் இந்திய அணியை தனி ஆளாக சுமந்தவர் சச்சின் டெண்டுல்கர் அவருடன் ஸ்டோக்ஸ்ஸை சமப்படுத்தி பேசுவது தவறானது என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் சச்சினின் ரன் கணக்கில் ஒட்டு மொத்த தொகையையும் இன்னும் ஸ்டோக்ஸ் தொடங்கக்கூட இல்லை என்றும் தங்களது பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -
Published by