- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா மேல் வங்கதேசம் சொல்லும் குற்றம் உண்மையில்லை.. அனுமதியை மறுத்த ஐசிசி அதிரடி அறிவிப்பு

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அத்தொடரில் இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதிக்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக வங்கதேசத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சில இந்து மக்கள் இயற்கை எய்தினார்கள்.

அதனால் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தஃபீசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்புகள் எழுந்தன. அதனால் பிசிசிஐ அறிவுறுத்தலின் பெயரில் அவரை கொல்கத்தா அணியிலிருந்து கழற்றி விட்டது. அந்த ஒரே காரணத்திற்காக இந்தியாவில் தங்களுடைய வீரர்களுக்கு பாதுகாப்பில்லை என்று வங்கதேசம் குற்றம் சாட்டியது.

- Advertisement -

வங்கதேசத்தின் குற்றசாட்டு:

மேலும் ரஹ்மானை கழற்றி விட்ட பிசிசிஐயை பழி வாங்கும் நோக்கத்தில் இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது. அதற்கு திடீரென வங்கதேச போட்டிகளை வங்கதேசத்தின் மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக ஐசிசி தெரிவித்தது. எனவே ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது புள்ளிகளை இழக்கத் தயாராகுங்கள் என்று வங்கதேசத்திற்கு முதற்கட்டமாக ஐசிசி பதிலளித்திருந்தது.

இருப்பினும் அதை ஏற்காத வங்கதேசம் தொடர்ந்து இந்தியா வரமாட்டோம் என்று கூறி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் உண்மையாகவே வங்கதேச வீரர்களுக்கான பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது. எனவே அந்த உண்மையற்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று வங்கதேசத்திற்கு மீண்டும் ஐசிசி பதிலளித்துள்ளது. இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்.

- Advertisement -

ஐசிசி அறிவிப்பு:

“தொடருக்கு மிக அருகில் மாற்றங்களை செய்வது சாத்தியமில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலையில் அட்டவணையை மாற்றுவது எதிர்கால ஐசிசி தொடர்களின் புனிதத்தைப் பாதிக்கும். வங்கதேசம் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த பல வாரங்களாக அந்நாட்டு வாரியத்துடன் ஐசிசி ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் பாதுகாப்பு திட்டங்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து உண்மையான உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன”

“அவை அனைத்தும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை முடிவு செய்தன. வங்கதேச அணியின் பாதுகாப்பை பாதிக்கும் எந்த ஒரு காரணிகளும் கண்டுபிடிப்புகளும் இல்லாத நிலையில் அவர்களது போட்டிகளை ஐசிசி வேறு இடத்திற்கு மாற்ற முடியாது”

இதையும் படிங்க: 238 ரன்ஸ்.. அபிஷேக், ரிங்கு மிரட்டல பேட்டிங்.. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா புதிய சாதனை ஸ்கோர்

“அவ்வாறு செய்வது மற்ற உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு தளவாடம் மற்றும் திட்டமிடலில் விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் ஐசிசி நிர்வாகத்தின் நடுநிலைமை, நியாயம், ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவதற்கான அபாயம் உருவாகும். ஐசிசி நல்லெண்ணத்துடன் செயல்படுவதற்கும் நிலையான தரங்களை நிலை நிறுத்துவதற்கும் உலகளாவிய விளையாட்டின் கூட்டு நலன்களை பாதுகாப்பதற்கும் உறுதிப்பூண்டுள்ளது” என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

- Advertisement -