முழுசா நடக்காத இந்த மேட்ச்க்கு சலுகை வேறயா ? ஐ.சி.சி யின் முடிவை – கிண்டல் செய்யும் ரசிகர்கள்

WTC
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் 4-வது நாளான நேற்றைய ஆட்டமும் மழையின் காரணமாக மொத்தமாக கைவிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டமும் கைவிடப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற்ற இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, குறைந்த ஓவர்களே வீசப் பட்டன. இதுவரை இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து மொத்தமாக 141 ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கிறார்கள்.

Rain

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களிடேயே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியானது மழையின் காரணமாக சுவராஸ்யமே இல்லாத ஒரு போட்டியாக சென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருந்த ரிசர்வ்டே ஆட்டத்திற்கான பார்வையாளர்களின் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது ஐசிசி. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ஐசிசி கூறியிருப்பதாவது,

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் ஆறாவது நாளுக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இது இங்கிலாந்து நாட்டில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான நிலையான நடைமுறை. இங்கிலாந்து குடிமக்கள் மட்டுமே இந்த போட்டியை நேரில் காண்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறது ஐசிசி. அதன்படி ஆறாவது நாளில் முதல் தரத்திற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் 10, 296 ரூபாயாகவும், இரண்டாவது தரம் 7,722 ரூபாயகவும், மூன்றாவது தரம் 5,148 ரூபாயாகவும் இருக்கிறது.

valimai

மழையின் காரணமாக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாத இந்த போட்டியின், ஆறாவது நாளில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டிக்கெட் விலையை ஐசிசி குறைத்திருப்பதாக தெரிகிறது.

gill

இங்கிலாந்தில் இந்த மாதத்தில் மழை பெய்யக்கூடும் என்று முன்னரே தெரிந்திருந்தும், அந்நாட்டில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் போன்ற வரலாற்று சிறப்புமிக்க தொடரின் இறுதிப் போட்டியை நடத்தும் முடிவை எடுத்த ஐசிசியை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் பலரும் சமூக வலை தளங்களில் விமர்ச்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement