அவ்வளவு கொண்டாட்டமா? தெ.ஆ அணியிடம் சேட்டை செய்த அப்ரிடி உட்பட 3 பாக் வீரர்களுக்கு ஐசிசி 2 தண்டனை

PAK vs RSA
- Advertisement -

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதும் 2025 முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அந்தத் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. குறிப்பாக பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது அணியாக ஃபைனலுக்குச் சென்றது.

முன்னதாக கராச்சியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸில் 28, 29வது ஓவரில் 2 சர்ச்சை ஏற்பட்டது. முதலில் ஷாஹீன் அப்ரிடி வீசிய 28வது ஓவரின் ஒரு பந்தை இளம் தென்னாப்பிரிக்க வீரர் மேத்தியூ பிரட்ஸ்கே எதிர்கொண்டு சிங்கிள் அடிக்க முயற்சித்தும் கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றத்தைச் சந்தித்த அவர் தன்னுடைய பேட்டை சுழற்றினார்.

- Advertisement -

ஷாஹீன் கோபம்:

அதன் காரணமாக கோபமடைந்த ஷாஹீன் அப்ரிடி அவரிடம் சில வார்த்தைகளை சொன்னார். அதற்கு அவரும் சில வார்த்தைகள் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கடுத்த பந்தை எதிர்கொண்ட மேத்தியூ சிங்கிள் எடுத்த ஓடினார். ஆனால் ஷாகின் அப்ரிடி அவர் ஓடும் வழியில் நகராமல் நடந்துச் சென்றார். அதனால் அவர் மீது மேத்யூ இடித்துத் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன் காரணமாக இருவரும் மீண்டும் சண்டை போட்டுக் கொண்டதைத் தொடர்ந்து நடுவர்கள் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார்கள். இது ஒரு புறமிருக்க அடுத்த ஓவரிலேயே கேப்டன் தெம்பா பவுமா சிங்கிள் எடுக்க முயற்சித்து ரன் அவுட்டானார். அதனால் ஏமாற்றத்தைச் சந்தித்த பவுமா பெவிலியனை நோக்கி நடையைக் கட்டினார்.

- Advertisement -

ஐசிசி 2 தண்டனை:

ஆனால் அப்போது விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் சௌத் ஷாக்கீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமாவுக்கு முன்னே சென்று வெறித்தனமாக கொண்டாடினார்கள். அவர்களுடைய கொண்டாட்டத்தால் பெவிலியனுக்கு செல்ல முடியாமல் நின்ற பவுமா சில நொடிகள் அங்கேயே நின்று பின்னர் சென்றார். அவர்களுடைய கண்மூடித்தனமான கொண்டாட்டம் ரசிகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட பாபர் அசாம் – விவரம் இதோ

இந்நிலையில் மேத்தியூவிடம் மோதிய சாகின் அப்ரிடிக்கு அந்தப் போட்டியின் சம்பளத்திலிருந்து 25% கட்டணத்தை ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. இது போக பவுமாவை பெவிலியன் செல்லவிடாமல் கொண்டாடிய சவுத் ஷாக்கில், கம்ரான் குலாம் ஆகியோருக்கு தலா 10% சம்பளம் அபராதமாக விதித்து ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் 2.12, 2.5 விதிமுறைகளை மீறிய அந்த மூவருக்கும் தலா 1 கருப்பு புள்ளிகளையும் ஐசிசி தண்டனையாக அறிவித்துள்ளது.

Advertisement