தோல்வியை சந்தித்தது மாட்டுமில்லாமல் தண்டனையையும் பெற்ற பாகிஸ்தான் அணி – விவரம் இதோ

PAK vs NZ
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் ஆட்டம் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் விளையாடிய நடப்பு சாம்பியரான பாகிஸ்தான் அணி தாங்கள் விளையாடிய முதல் லீக் ஆட்டத்திலேயே நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு விதிக்கப்பட்ட அபராதம் :

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் இருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பாகிஸ்தான் அணி முதல் போட்டிலேயே தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது மட்டும் இன்றி பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ள தகவலும் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை வீசி முடிக்கவில்லை என்கிற காரணத்தினால் களத்தில் இருந்த நடுவர் ஐசிசி-யிடம் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். அதனை ஆலோசித்த ஐசிசி-யும் பாகிஸ்தான் அணி கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டது உறுதி செய்தது.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 5% அபராதத்தையும் அளித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் முடிவில் 320 ரன்கள் எடுக்க பாகிஸ்தான அணி 260 ரன்கள் மட்டுமே எடுத்தால் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 60 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 4 ஆவது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா நிகழ்த்திய அசத்தல் சாதனை.. முழு விவரம் இதோ

குரூப் ஏ பிரிவில் தற்போது கடைசி இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி அடுத்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement