4 ஆவது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா நிகழ்த்திய அசத்தல் சாதனை.. முழு விவரம் இதோ

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டம் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 228 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 231 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதது.

ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :

அதோடு இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை அசத்தலாக துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் வங்கதேசம் எதிராக நேற்று அவர் 14 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை பூர்த்தி செய்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையையும் உலக அளவில் பத்தாவது வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை குவித்துள்ளனர்.

அதோடு விராட் கோலிக்கு அடுத்து வெகு விரைவாக 11000 ரன்களை எட்டிப் பிடித்து இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 100 வெற்றிகளை பெற்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக முகமது அசாருதீன், மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் நான்காவது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 12 டெஸ்ட் போட்டிகளிலும், 38 ஒருநாள் போட்டிகளிலும், 50 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நியூஸிலாந்துகிட்ட தோற்க இதான் காரணம்.. இதை சரியா செஞ்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. சல்மான் பேட்டி

முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியானது அடுத்ததாக தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement