நியூஸிலாந்துகிட்ட தோற்க இதான் காரணம்.. இதை சரியா செஞ்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. சல்மான் பேட்டி

Salman Agha
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மறுபுறம் முன்னாள் சாம்பியன் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. அதில் தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

அடுத்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே செமி ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் துணை கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திட்டங்களை சரியாக செய்து வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பஃகார் ஜமான் காயத்தால் விலக உள்ளது தங்களுக்கு பெரிய பின்னடைவு என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சல்மான் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய ஆட்டம் எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்”

“முடிந்தளவுக்கு நாங்கள் அதை சீக்கிரமாக மறந்து விட்டு அடுத்த போட்டியில் கவனம் செலுத்த முயற்சிப்போம். இந்தியாவுக்கு எதிரான அந்த பெரிய போட்டியில் நாங்கள் எங்களுடைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முயற்சி செய்வோம். ஒவ்வொரு நாளும் புதியது. எனவே இந்தியாவுக்கு எதிராக நாங்கள் எங்களது திட்டங்களை நன்றாக செயல்படுத்த முயற்சிப்போம்”

- Advertisement -

ஜமான் சந்தேகம்:

“ஒரு போட்டியில் வெற்றி பெறும் நாங்கள் மற்றொரு போட்டியில் தோல்வியை சந்திக்கிறோம். உலகின் எந்த அணியாக நீங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக அசத்த வேண்டும். எனவே அதில் நாங்கள் வேலை செய்ய வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக பவர் பிளே ஓவர்கள் நாங்கள் திட்டமிட்டது போல் செல்லவில்லை. பஃகார் கடந்த 5 – 6 வருடங்களாக எங்களுடைய பவர் பிளேயராக இருந்து வருகிறார்”

இதையும் படிங்க: நல்லவேளை பாண்டியா வரல.. விராட் கோலி போல கில்லுக்கு சுயநலமின்றி உதவிய ராகுல்.. ரசிகர்கள் பாராட்டு

“அவர் இல்லாததால் முதல் போட்டியில் நாங்கள் பவர் பிளே ஓவர்களில் 30 ரன்கள் கூட அடிக்கவில்லை. அதில் பெரிய ரன்கள் குவிக்கா விட்டால் உங்களால் வெற்றி பெறுவது கடினம்” எனக் கூறினார். 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அதே போல இம்முறையும் வெல்ல அந்த அணி முயற்சிக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement