T20 உலகக்கோப்பை : ஐ.சி.சி அமல்படுத்தவுள்ள 5 புதிய விதிமுறைகள் – விவரம் இதோ

ICC
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற விளையாடுவதால் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

ICC T20 World Cup

அதேவேளையில் எந்த அணி கோப்பையை வெல்லும்? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்த தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கவுள்ள இந்த டி20 உலக கோப்பை தொடரில் 5 புதிய மாற்றங்களை ஐசிசி அறிமுகப்படுத்த உள்ளது.

- Advertisement -

அதன்படி அந்த ஐந்து விதிமுறைகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது நடைபெறவுள்ள உலக கோப்பையில் நடைமுறைக்கு வரவுள்ள ஐந்து ஐசிசி விதிமுறைகள் இதோ. 1) பேட்ஸ்மேன்களின் கவனத்தைக் குலைக்கும் வகையில் பந்துவீசும் அணியினர் செயல்பட்டாலோ அல்லது விதிமுறைகளுக்கு புறம்பான முறையில் ரன்களை தடுக்க முயன்றாலோ நடுவர்கள் மூலம் பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் போனசாக வழங்கப்படும்.

Siraj

2) குறிப்பிட்ட 20 ஓவர்களை வீச ஒரு அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும். 3) ஒரு பேட்ஸ்மேன் பந்தை ஸ்ட்ரைக் செய்து அந்த பந்தை பந்துவீச்சாளர் பிடித்து பேட்ஸ்மேன் கிரீஸிற்கு வெளியே நகர்ந்துவிட்டார் என்பதற்காக ரன் அவுட் செய்யும் நோக்கில் அவரை நோக்கி எறிய கூடாது. அவ்வாறு அவரை நோக்கி எரிந்து ரன் அவுட் செய்தாலும் அது ஏற்கப்படாது.

- Advertisement -

4) பொதுவாக பவுலர்கள் பந்து வீச முற்படும்போது எதிர்புறத்தில் உள்ள பேட்ஸ்மேன்கள் கிரீஸ் லைனிற்கு வெளியே வந்து ரன் ஓட தயாரானால் அவர்களை பவுலர்கள் கவனித்து ரன் அவுட் செய்யலாம். இந்த விதிமுறை நியாயமற்றதாக இதுவரை பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை அது நியாயமான ஒன்றாக பார்க்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கங்குலி தான் அதை செய்யல, நீங்களாச்சும் அந்த முடிவை எடுக்கனும் – புதிய பிசிசிஐ தலைவருக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

5) ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்தை கேட்ச் கொடுத்து அவுட் ஆனால் புதிதாக களத்தில் வரும் வீரர் தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும். கிராஸ் ஓவர் செய்திருந்தால் கூட புதிதாக வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும். இப்படி ஐந்து புதிய விதிமுறைகளை ஐசிசி அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement