- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு: மாஸ் காட்டும் இந்தியா ! அதலபாதாளத்தில் பாகிஸ்தான்

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில வருடங்களாகவே இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. குறிப்பாக விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இந்திyaa பல சாதனைகளை படைத்து வருகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மொத்தம் 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும் 109 தர புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது. இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளை இழந்து வெறும் 80 புள்ளிகள் மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது .
டெஸ்ட் ஜாம்பவான்களான இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணி 5வது இடத்திலும் உள்ளது.

- Advertisement -

பேட்டிங் தரவரிசையில் – விராட் கோலிக்கு இன்னும் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார்கள் . ஸ்மித் வெறும் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் ஸ்மித். விராட் கோலி 928 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ஜடேஜா நான்காவது இடத்திலும், ரஹானே 5வது இடத்திலும் புதிதாக வந்த மயங்க் அகர்வால் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரஹ் கடந்த சில டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை, இதன் காரணமாக அவரது தரவரிசை குறைந்து 5 வது இடத்தில் உள்ளார். அஸ்வின் இந்த பட்டியலில் 10வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் .

ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் – வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார் .இந்தியாவின் ஜடேஜா இரண்டாவது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -
Published by