- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கெயில், சேவாக்கால் முடியல.. இந்த பையன் என்னோட 400 ரன்ஸ் ரெக்கார்ட்டை உடைக்க வாய்ப்பிருக்கு.. லாரா நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு நிகரான தரத்தை கொண்ட அவரும் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், மெக்ராத், போன்ற உலகின் அனைத்து தரமான டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்த பெருமைக்குரியவர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12000+ ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000+ ரன்களும் குவித்துள்ள அவர் நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 400* ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக அவர் படைத்த உலக சாதனை 20 வருடங்கள் கடந்தும் யாராலும் உடைக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் வீரேந்திர சேவாக், ஜெயசூர்யா, மேத்தியூ ஹைடன் போன்றவர்கள் தமது 400 ரன்கள் சாதனையை உடைப்பதற்காக நெருங்கி வந்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

லாரா நம்பிக்கை:
ஆனால் இதுவரை உடைக்கப்படாமல் இருக்கும் அந்த சாதனையை இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது சாதனைகள் அச்சுறுத்தப்படுவதாக நான் உணர்ந்தால் அதை உடைக்க ஜெய்ஸ்வாலுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான திறமையை கொண்டுள்ள அவர் ஏற்கனவே 2 இரட்டை சதங்கள் அடித்துள்ளார்”

“அந்தளவுக்கு அவர் திறமையுடையவர். தற்போதுள்ள வீரர்கள் வேகத்துடன் பேட்டிங் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் 300க்கும் ரன்களை அடித்த வீரர்களை பாருங்கள். அது கிறிஸ் கெயில், விரேந்தர் சேவாக், சனாத் ஜெயசூர்யா, இன்சமாம்-உல்-ஹக், மேத்தியூ ஹைடன். அது போன்ற வீரர்கள் பவுலிங் அட்டாக்கை அடித்து நொறுக்கக் கூடியவர்கள்”

- Advertisement -

“ராகுல் டிராவிட் அல்லது ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் அதை செய்வார்கள் என்று உங்களால் சொல்ல முடியாது. எனவே வேகமாக பேட்டிங் செய்யும் வீரருக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. ஜெய்ஸ்வால் அது போன்ற வீரர். டேவிட் வார்னர் அதை நெருங்கிய போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அவர் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய வீரர். எனவே ஆம் ஏதோ ஒரு தருணத்தில் அந்த சாதனை உடைக்கப்படும். அது ஒரு நபரின் விதியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக அனைத்தும் ஒரு இடத்தில் விழ வேண்டும்”

இதையும் படிங்க: 2023 ஃபைனலில் ஒருத்தர் கூட அதை செய்யல.. இந்தியா உ.கோ ஜெயிக்க 2008 – 2011 மாதிரி விளையாடனும்.. சேவாக் அட்வைஸ்

“அந்த நேரத்திற்காக நான் காத்திருக்கிறேன். அது நடக்கும் என்று நம்புகிறேன். அதை பார்ப்பதற்காக நான் இங்கே சுற்றியிருப்பேன்” என்று கூறினார். முன்னதாக நவீன கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் அல்லது ரோகித் சர்மா 400 ரன்கள் சாதனையை உடைக்கும் திறமையை கொண்டவர்கள் என்று ஏற்கனவே லாரா தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் வார்னர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் ரோஹித் 36 வயதை தாண்டி விட்டார். எனவே அடுத்ததாக ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது என்றால் மிகையாகாது.

- Advertisement -