- Advertisement -
ஐ.பி.எல்

இப்படி செய்வேன்னு நானே நினைக்கல.. யுவராஜ், லாராவுக்கு நன்றி.. பாராட்டு அவரை சேரும்.. அபிஷேக் பேட்டி

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 8ஆம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதெராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ திணறலாக விளையாடி 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48*, ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அதைத் துரத்திய ஹைதராபாத் அணிக்கு வேறு ஏதோ பிட்ச்சில் விளையாடுவது போல் லக்னோ பவுலர்களை சரமாரியாக அடித்து துவைத்த அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் எடுத்தனர். அதனால் 9.4 ஓவரிலேயே 167/0 ரன்கள் எடுத்த ஹைதராபாத் எளிதாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் சென்னையை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

ஜாம்பவான்களுக்கு நன்றி:
இந்த வெற்றிக்கு 89 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல அவருடன் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் சர்மாவும் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் இத்தொடர் துவங்கும் போது இவ்வளவு ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவேன் என்று தாமே எதிர்பார்க்கவில்லை என அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

தம்முடைய இந்த ஆட்டத்திற்கு யுவராஜ் சிங், பிரைன் லாரா ஆகிய ஜாம்பவான்களுடன் அப்பாவும் உதவியதாக அபிஷேக் கூறியுள்ளார். அத்துடன் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கி அழுத்தத்தை போக்கும் டிராவிஸ் ஹெட் பாராட்டுக்குடையவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் இவ்வளவு ஸ்ட்ரைக் ரேட்டில் நான் விளையாடுவேன் என்று எப்போதும் நினைத்ததில்லை”

- Advertisement -

“ஆனால் ஹைதராபாத் அணி நிர்வாகத்திற்கு நன்றி. அவர்கள் எனக்கு தெளிவான மெசேஜ் கொடுத்துள்ளனர். நானும் எனக்கு ஆதரவு கொடுக்கிறேன். அனைத்து பாராட்டுக்களும் ஹெட்டுக்கு செல்லும். அவர் ஆரம்பத்திலேயே அனைத்து பவுலர்களுக்கு எதிராக அடித்து நொறுக்கி அழுத்தத்தை குறைத்து விடுகிறார். தண்ணீர் இடைவெளியின் போது எங்களுடைய பவுலர்கள் பிட்ச் 2வது இன்னிங்ஸில் பேட்டிங்க்கு சாதகமாக மாறுவதாக சொன்னார்கள்”

இதையும் படிங்க: வேகமாக சேசிங் செய்ய இதான் காரணம்.. 2024 டி20 உ.கோ தொடரிலும் அவங்கள அடிப்பேன்.. ஹெட் பேட்டி

“ஆனால் அது அதிகமாக எதுவும் செய்யவில்லை என்று நானும் ஹெட்டும் நினைத்தோம். தொடர் துவங்குவதற்கு முன்பாக நான் போட்ட கடினமான உழைப்பு தற்போது வெளிப்படுகிறது. அதற்கு யுவராஜ் பாஜி, பிரையன் லாரா மற்றும் என்னுடைய முதல் பயிற்சியாளரான அப்பாவுக்கு நன்றி” என்று கூறினார். இந்த தோல்வியால் லக்னோ 6வது இடத்திற்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -