அப்பாடா இனிமேல் அம்பயர்கள் தொல்லை இனியில்லை – ஐ.சி.சி கொண்டுவந்திருக்கும் அசத்தலான திட்டம்

Dharmasena
Advertisement

தற்போது கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருப்பது நடுவரின் தவறான தீர்ப்புகளும் மற்றும் நோபால் பந்தில் விக்கெட் போன்றவையும் தான். நடுவர்களின் இந்த தவறான தீர்ப்பு மூலமாகவும், நோபால் மூலமாகவும் பலமுறை போட்டியின் முடிவு மாறி இருப்பது உண்மை.

Umpire

கிரிக்கெட் போட்டிகளில் நடுவரின் தீர்ப்பு மிக முக்கியமானது. ஒரு பேட்ஸ்மேன் விக்கெட்டை இழக்கும் பட்சத்தில் அந்த பந்து சரிதானா ? அவர் சரியாக வீசியிருக்கிறாரா ? பேட்ஸ்மேன் சரியான முறையில் விக்கெட் ஆட்டமிழந்து விட்டாரா ? என்று நடுவர்கள் கவனிப்பது அவசியம். ஆனால் பலமுறை பவுலர்கள் நோபல் வீசி இருந்தும் பேட்ஸ்மேன்கள் அவுட் கொடுக்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

- Advertisement -

பவுலர் நோபால் வீசி அவுட் கொடுக்கப்பட்ட பின் மீண்டும் ரீப்ளேயில் பார்த்தால் பவுலர் நோபால் வீசியது தெரிய வந்திருக்கும். இந்நிலையில் தேவையில்லாமல் இதுபோன்ற நோ பாலில் ஆட்டமிழப்பதை தவிர்க்கும் விதமாக இனிமேல் ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் நோபால் தானா என்று ஆராய்வதற்கான விதியை பிசிசிஐ பலமுறை ஐசிசியிடம் வலியுறுத்தியது.

Umpire

அதன்படி தற்போது இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐசிசி உள்ளூர் தொடர்களில் இந்த விதியை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் செயல்பாடுகளைப் பொருத்து பின்பு சர்வதேச போட்டிகளிலும் பயன்படுத்த வகை செய்யப்படும் என்று ஐசிசி உறுதி அளித்துள்ளது. இதனால் இனி அம்பயர்களின் தவறான முடிவு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை

Advertisement