ஐசிசி டி20 உலககோப்பை 2022 : முழு அட்டவணை வெளியீடு பற்றி ஐசிசி முக்கிய அறிவிப்பு ! முழு விவரம் இதோ

Cup
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடர் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது, 2007 முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்றது. அதில் வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதை அடுத்து வரலாற்றின் 8வது ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

aus 1

- Advertisement -

அட்டவணை :
வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இந்த உலககோப்பை நடைபெற உள்ளது. ரவுண்டு 1, சூப்பர் 12 மற்றும் நாக் அவுட் என 3 வகையான சுற்றுகளாக நடைபெற உள்ள இந்த உலக கோப்பையில் பைனல் உட்பட மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 45 போட்டிகளும் அந்நாட்டில் உள்ள கீளொக், ஹோபார்ட், அடிலெய்டு, பெர்த், பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் ஆகிய 7 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

மைதானங்கள்:
இதில் சூப்பர் 12 சுற்றுக்காக கத்துக்குட்டிகள் பலப்பரீட்சை நடத்த உள்ள ரவுண்ட் 1 போட்டிகள் கீளொக் மற்றும் ஹோபார்ட் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளன. சூப்பர் 12 போட்டிகள் முறையே சிட்னி, அடிலெய்டு போன்ற பெரிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதேபோல இந்த உலக கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி வரும் நவம்பர் 9ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் 2வது அரையிறுதி போட்டி நவம்பர் 10ஆம் தேதி அடிலைய்ட் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

cup

பைனல் & அணிகள்:
இதை அடுத்து 1,00,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகின் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பர் 13ஆம் தேதி அன்று மாபெரும் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பையில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

முழு அட்டவணை:
இந்நிலையில் இந்த உலக கோப்பைக்கான முழு அட்டவணை வரும் ஜனவரி 21-ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஐசிசி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுபற்றி ஐசிசி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஐசிசி டி20 உலக கோப்பைக்கான முழு அட்டவணை வரும் ஜனவரி 21ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. அப்போது எந்த போட்டியில் பங்கு பெறலாம் எந்த போட்டிக்கு டிக்கெட் வாங்கலாம் என்பது போன்ற முடிவுகளை ரசிகர்கள் எடுக்க முடியும். மேலும் இந்த உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகள் வரும் 2022 பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ரசிகர்கள் விற்பனைக்காக வரவுள்ளது”. என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நான் மட்டும் கிரவுண்ட்ல இருந்து இருந்தா.. ரிஷப் பண்டின் அதிரடி சதம் குறித்து – கவாஸ்கர் புகழாரம்

இந்த உலக கோப்பையில் முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கோப்பைக்காக விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement