நான் மட்டும் கிரவுண்ட்ல இருந்து இருந்தா.. ரிஷப் பண்டின் அதிரடி சதம் குறித்து – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சம நிலையில் உள்ளதால் இந்த போட்டி மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11-ஆம் தேதி துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களை மட்டுமே குவித்தது.

pant 2

- Advertisement -

இந்திய அணி 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. அதன்படி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இன்னிங்சில் 212 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் ரன்கள் எடுக்க தடுமாறிய நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக இந்திய வீரர்களில் ஒருவர் கூட 30 ரன்களை தொடாத வேளையில் பண்ட் மட்டும் 139 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 100 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் இந்த சிறப்பான ஆட்டம் தற்போது அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஏனெனில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது தனது அதிரடியான ஆட்டத்தை கோலியுடன் இணைந்து வெளிப்படுத்தினார்.

Pant

ஒருபுறம் கோலி நிதானமாக விளையாட மறுபக்கம் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். பின்னர் கோலியும் ஆட்டமிழந்து வெளியேறியதும் பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் அவருக்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை என்றாலும் கிடைக்கும் பந்துகள் எல்லாம் பவுண்டரிகளும், சிக்ஸருமாக பறக்கவிட்ட அவர் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் பண்ட் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : சிக்ஸ் அடிக்க இறங்கி பேட்டை பறக்க விட்ட ரிஷப் பண்ட் – அவ்ளோ வெறி மாப்பிளைக்கு

இந்நிலையில் பண்ட் பெவிலியன் திரும்பியபோது ராகுல் டிராவிட் பால்கனி அருகே நின்றுகொண்டு தட்டி வரவேற்றார். ரிஷப் பண்ட்டின் இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்த சுனில் கவாஸ்கர் வர்ணனையின்போது கூறுகையில் : நானும் மைதானத்தில் இருந்து இருந்தால் நிச்சயம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்து இருப்பேன். அந்த அளவிற்கு இது ஒரு அற்புதமான இன்னிங்ஸ் என்று ரிஷப் பண்ட்டை பாராட்டியிருந்தார். கடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது மோசமான ஷாட்டை அடி அவுட் ஆனபோது அவரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் மீண்டும் ரிஷப் பண்ட்டை அவர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement