டி20 உலககோப்பை : ரசிகர்களுக்கான அனுமதியை வழங்கி நற்செய்தி சொன்ன – ஐ.சி.சி (அதிகாரபூர்வ அறிவிப்பு)

Cup
Advertisement

2007-ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாப்பிரிக்க நாட்டில் டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் மூலம் நடத்தப்பட்டது. அந்த தொடரில் இந்திய அணி தோனி தலைமையில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து தற்போது வரை ஆறு முறை டி20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை கைப்பற்றி அசத்தியுள்ளது.

cup

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் இங்கு பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான அட்டவணையில் போட்டிகள் நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான அனைத்து வீரர்களும், அணிகளும் தயாராக இருக்கும் வேளையில் ரசிகர்களுக்கான அனுமதி குறித்து ஐசிசி தற்போது தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட அளவே ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

fans

ஆனால் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் நிச்சயம் 70% வரை ரசிகர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி உறுதியளித்துள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதற்குண்டான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் ரசிகர்கள் பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : இப்போதுள்ள சூழ்நிலையில் புவனேஷ்வர் குமாரை விட சி.எஸ்.கே வீரரான இவரே பெஸ்ட் பவுலர் – முன்னாள் வீரர் கருத்து

இதனால் எதிர்வரும் ஐசிசி தொடரில் 70 சதவீத ரசிகர்கள் போட்டியை நேரில் காண இருப்பது வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் எனலாம். ஏனெனில் காலி மைதானங்களில் விளையாடி வந்த வீரர்கள் மீண்டும் ரசிகர்களின் மத்தியில் விளையாட இருப்பது அவர்களுக்கு பழைய அனுபவத்தை திருப்பித் தரும் என்பது மட்டுமின்றி அந்த அணிகளுக்கான ஊக்கமும் ரசிகர்கள் மூலம் கிடைக்கும் என்பதால் இந்த டி20 உலகக்கோப்பை சுவாரசியமாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement