இப்போதுள்ள சூழ்நிலையில் புவனேஷ்வர் குமாரை விட சி.எஸ்.கே வீரரான இவரே பெஸ்ட் பவுலர் – முன்னாள் வீரர் கருத்து

Bhuvi
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. அதனை தொடர்ந்து அங்கு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்க இருக்கும் இந்த தொடரின் மீதான ஆர்வம் தற்போதே அதிகரித்துள்ளது.

Cup
T20

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன. அதன்படி இந்திய அணியும் இம்மாதத் துவக்கத்தில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

- Advertisement -

அதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும் இருந்தது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் நிச்சயம் பங்கேற்க வேண்டிய ஒரு வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Sanjay
Sanjay manjrekar

இந்த டி20 உலக கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு முன்னதாக தீபக் சாகர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். புவனேஸ்வர் குமார் நல்ல பலர் தான் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் தற்போது தனது முழு திறமையுடன் இல்லை. அதே வேளையில் தீபக் சாஹர் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரால் பந்தை இரு பக்கமும் ஸ் விங் செய்யமுடிகிறது. அதுமட்டுமின்றி பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட்டையும் வீழ்த்துகிறார்.

- Advertisement -

தற்போது உள்ள படி பார்த்தால் புவனேஷ்வர் குமாரை விட தீபக் சாஹர் சிறந்த பந்துவீச்சாளர் என்றே கூறுவேன். நிச்சயம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு வீரர் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

chahar

அவர் கூறியது போலவே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமாரிடம் இருந்து பெரிய அளவில் சிறப்பான பந்துவீச்சு வெளிப்படவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தீபக் சாஹர் சிறப்பான பந்துவீச்சை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு அவர் உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement