இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி – காரணம் இதுதான்

sl
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியை அபாரமாக வீழ்த்திய இந்திய அணி 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் குவிக்க அதன்பின்னர் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

- Advertisement -

துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதிநேரத்தில் தீபக் சாஹரின் சிறப்பான ஆட்டம் காரணமாக கடைசி ஓவரின் முதல் பந்தில் திரில்லிங்கான வெற்றியைப் பெற்றது. ஒரு கட்டத்தில் எளிதாக போட்டியை வென்றுவிடும் என்று எதிர்பார்த்த இலங்கை அணி இந்தத் தோல்வியால் மிகவும் துவண்டு உள்ளது.

INDvsSL

இந்நிலையில் தற்போது அவர்களுக்கு மேலும் வருத்தத்தை அளிக்கும் விதமாக ஐசிசி அவர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. ஏனெனில் ஐசிசி விதிமுறைப்படி பந்துவீசி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அனைத்து இலங்கை வீரர்களுக்கும் 20% போட்டி ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement