பெவிலியனுக்கு போன வீரரை வம்பிழுத்து வசமாக சிக்கிய சாம் கரன் – தண்டனை கொடுத்த ஐ.சி.சி

Sam-Curran
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Sam Curran 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் மைதானத்தில் ரசிகர்களை கவனத்தை ஈர்த்தது மட்டுமுமின்றி சமூக வலைத்தளத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தெம்பா பவுமாவை வீழ்த்திய சாம் கரன் அவருக்கு எதிராக அந்த விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

Sam Curran and Bavuma

இந்த போட்டியில் 102 பந்துகளை சந்தித்த தெம்பா பவுமா 109 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை திணற வைத்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்திய சாம் கரன் அவர் பெவிலியனை நோக்கி நகர்ந்து செல்லும் போது அவருக்கு எதிராக ஆக்ரோஷமான விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் அப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக தற்போது ஐசிசி அவருக்கு தண்டனையும் வழங்கி உள்ளது. ஏனெனில் ஐசிசி விதிப்படி ஒரு வீரரின் விக்கட்டை பவுலர் ஆக்ரோஷமாக கொண்டாடுவது மற்றும் அதிகபட்ச உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டாடுவது ஆகியவை விதிமீறல் ஆகும். ஏனெனில் இது எதிரணியின் வீரரை வன்முறைக்கு தூண்டுவதற்கு உரிய செயல் என்று பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : நான் இந்தியா வந்த 2 முறையும் எங்க டீமால அதை பண்ண முடியல – ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை

இதன் காரணமாக சாம் கரனுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் ஐசிசி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதோடு மட்டுமில்லாமல் இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் மற்றும் ராசி வேண்டர் டுசைன் ஆகியோருக்கு இடையேயும் வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement