- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ், பண்ட் ஐபிஎல் சம்பளம் விட குறைவு.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான பரிசுத்தொகையை வெளியிட்ட ஐசிசி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்க உள்ளது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வருணிக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாட உள்ளது. அதில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக களமிறங்குகிறது. இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத்தொகை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் முதலாவதாக கோப்பையை வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் 20.8 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இது கடைசியாக நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணிக்கு கொடுக்கப்பட்ட தொகையை விட 53% அதிகமாகும்.

- Advertisement -

பரிசுத்தொகை அறிவிப்பு:

அதே போல ஃபைனல் வரை சென்ற தோல்வியை சந்திக்கும் அணிக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 10.40 கோடி ரூபாயில் பரிசாக கொடுக்கப்பட உள்ளது. மேலும் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்து வெளியேறும் 2 அணிகளுக்கு இந்திய ரூபாயில் தலா 5.20 கோடி ரூபாய்கள் பரிசாக வழங்கப்பட உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

இது போக இந்தத் தொடரில் லீக் சுற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 34000 அமெரிக்க டாலர்கள் தொகை பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் செமி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் புள்ளிப்பட்டியலில் 5, 6வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 350000 அமெரிக்க டாலர்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 7, 8வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ஆறுதல் பரிசாக 140000 அமெரிக்க டாலர்கள் பரிசாக கொடுக்கப்பட உள்ளது.

- Advertisement -

பணமும் கெளரவமும்:

இது மட்டுமல்லாமல் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அனைத்து 8 அணிகளுக்கும் தலா 125000 அமெரிக்க டாலர்கள் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் ஒரு அணி அனைத்துப் போட்டிகளையும் வென்று கோப்பையை வென்றால் 22 கோடி ரூபாய் பரிசாகப் பெறும். இருப்பினும் ஐபிஎல் 2024 தொடரில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் 27, ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிகளை சம்பளமாக பெற உள்ளார்கள்.

இதையும் படிங்க: குல்தீப் துருப்புச்சீட்டு.. ஷமி இல்லாமல் தனது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட ரெய்னா

அதன் அடிப்படையில் பார்க்கும் போது அந்த தொகையை விட சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளர் பரிசுத் தொகை குறைவாகவே இருக்கிறது என்று சொல்லலாம். இருப்பினும் பணத்தை எல்லாம் தாண்டி நாட்டுக்காக சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மிகப்பெரிய கௌரவ வரலாறு ஆகும். அதை வெல்வதற்காகவே அனைத்து அணிகளும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -