மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 2 வீரர்களுக்கு 8 வருட தடை விதித்து அதிரடி காட்டிய ஐ.சி.சி – விவரம் இதோ

uae-3
- Advertisement -

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ள ஆண்களுக்கான ஐசிசி 20 ஓவர் டி20 உலகக் கோப்பைக்கான குவாலிபயர் தொடர் சென்ற ஆண்டு நடைபெற்றது. இந்தியா பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா , நியூசிலாந்து , வெஸ்ட் இண்டீஸ் , ஆப்கானிஸ்தான் , ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 10 அணிகள் தேர்வான நிலையில் மீதமுள்ள 6 அணிகளை தேர்ந்தெடுக்கும் விதமாக 2019 ஆம் ஆண்டில் குவாலிபயர் தொடர் நடத்தப்பட்டது.

uae 1

- Advertisement -

இந்த தொடரில் ஐக்கிய அமீரக அணியில் இரண்டு வீரர்களான நவீத் மற்றும் அன்வர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஐசிசியின் சிறப்பு ஊழல் எதிர்ப்பு குழு இது சம்பந்தப்பட்ட விசாரணையை நடத்தி வந்த நிலையில் இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எட்டு வருடங்கள் இவர்களுக்கு கிரிக்கெட் ஆட ஐசிசி வாரியம் தடை விதித்துள்ளது.

33 வயதாகும் நவீத் முன்னாள் கேப்டன் ஆவார். இவர் 39 ஒருநாள் போட்டிகளிலும் , 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 42 வயதுடைய அன்வர் 40 ஒருநாள் போட்டிகளிலும் 32 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய ஐசிசி ஊழல் எதிர்ப்பு குழுவின் ஜெனரல் மேனேஜர் அலெக்ஸ் மார்சல் கூறுகையில் :

uae

இவர்கள் இருவருக்கும் எட்டு ஆண்டுகள் தடை இந்த தடை மிக முக்கியமான தடையாக நான் பார்க்கிறேன். இந்த தடை மிக முக்கியமான தடையாக நான் பார்க்கிறேன். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மேட்ச் பிக்சிங் செய்ய நினைக்கும் வீரர்களுக்கு இந்த தண்டனை நினைவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

uae 2

2019ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கான குவாலிபையரில் மொத்தமாக 14 அணிகள் களமிறங்கின.அதில் இறுதியாக நெதர்லாந்து , நமீபியா , பப்புவா நியூ கினி , அயர்லாந்து , ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய 6 அணிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி t20 கோப்பை தொடருக்கு தகுதி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement