சாப்ட் சிக்னலுக்கு குட் பை, ஐசிசி அறிவித்துள்ள 3 புதிய ரூல்ஸ் – இந்தியா ஏமாற்றியதாக பாக் ரசிகர்கள் குமுறல், உண்மை இதோ

Kohli IND vs PAK
- Advertisement -

சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் வரியமான ஐசிசி அவ்வப்போது காலத்தின் வளர்ச்சிகேற்ப அடிப்படை விதிமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலுவையில் இருக்கும் அடிப்படை விதிமுறைகளில் 3 புதிய மாற்றங்கள் செய்யப்படுவதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி சௌரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி பரிந்துரைகளின் படி இந்த புதிய மாற்றங்கள் வரும் ஜூன் 1இல் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி மற்றும் ஜூன் 7இல் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து நடைமுறைக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

1. சாப்ட் சிக்னல்: தற்போது களத்தில் இருக்கும் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை மறுபரிசலைகளை செய்ய டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதை பயன்படுத்தி டிஆர்எஸ் எடுக்கும் போது களத்தில் இருக்கும் நடுவர் 3வது நடுவரிடம் சோதிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு முன்பாக தம்முடைய தீர்ப்பை (சாப்ஃட் சிக்னல்) இணைத்து மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைப்பார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 3வது நடுவர் சோதிக்கும் போது என்ன தான் டெக்னாலஜியை பயன்படுத்தினாலும் தெளிவான ஆதாரம் கிடைக்காத சமயங்களில் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை அப்படியே மீண்டும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பு திருப்தியளிக்காத காரணத்தாலேயே மறுபரிசலனை செய்யப்படும் போது மீண்டும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டால் பின்னர் எதற்கு டிஆர்எஸ்? என்று சமீப காலங்களில் வெற்றியை தலைகீழாக மாற்றிய முக்கிய தருணங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

அதை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி இனிமேல் ரிவியூ செய்யும் போது நேரடியாக அதை 3வது நடுவர் தான் சோதிப்பார் என்றும் களத்தில் இருக்கும் நடுவர்கள் எந்த தீர்ப்பையும் கொடுக்க வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் இனிமேல் ரிவ்யூ செய்யும் போது களத்தில் இருக்கும் அம்பயர்கள் எந்த தீர்ப்பும் வழங்காமல் அது பற்றி 3வது நடுவரிடம் ஆலோசிப்பார்கள் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

2. உயிர் முக்கியம்: அதே போல ஆபத்தான இடங்களில் நிற்கும் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரை பேட்ஸ்மேன் எதிர்கொள்ளும் போது, ஸ்டம்ப்களுக்கு அருகே விக்கெட் கீப்பர் நிற்கும் போது, பேட்ஸ்மேனுக்கு அருகே ஃபீல்டர் நிற்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

3. ஃபிரீ ஹிட்: அத்துடன் பவுலர் நோபால் வீசினால் அதற்கு தண்டனையாக வழங்கப்படும் ஃப்ரீ ஹிட் பந்தை பேட்ஸ்மேன்கள் அடிக்காமல் தவற விட்டு கிளீன் போல்டானால் அந்த சமயத்தில் எடுக்கப்படும் ரன்கள் இனிமேல் உதிரிகளில் (எக்ஸ்ட்ராஸ்) சேர்க்கப்படாமல் நேரடியாக பேட்ஸ்மேன் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த விதிமுறையில் தான் இந்தியா தங்களை ஏமாற்றி விட்டதாக தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குமுறலை வெளிப்படுத்த காரணமாகியுள்ளது. அதாவது 2022 டி20 உலக கோப்பையில் முகமது நவாஸ் வீசிய 19வது ஓவரில் ஃபிரீ ஹிட் பந்தை தவற விட்ட விராட் கோலி கிளீன் போல்டானார். அப்போது அவரும் தினேஷ் கார்த்திக்கும் ரன்கள் எடுக்க ஓடினர். குறிப்பாக அந்த நேரத்தில் ஃபிரீ ஹிட்டில் எப்படி ரன்கள் எடுக்கலாம்? என்று நடுவரிடம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவுட்டில்லை என்ற அடிப்படை விதிமுறையின் விழிப்புணர்வை கொண்ட விராட் கோலி வரலாற்று வெற்றியை பெறுவதற்கான 3 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது.

இந்நிலையில் இந்த புதிய விதிமுறையை மீண்டும் சரியாக புரிந்து கொள்ளாத பாகிஸ்தான் ரசிகர்கள் ஃபிரீ ஹிட்டில் விராட் கோலி ரன்களை எடுக்கும் அளவுக்கு நடுவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இருப்பினும் உண்மை என்னவெனில் பழைய விதிமுறைப்படி அந்த 3 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க:IPL 2023 : அவர வாங்காம விட்டதுக்காக இப்போவும் வருத்தப் படுறோம் – தமிழக வீரரை பாராட்டிய ஸ்டீபன் பிளெமிங்

ஆனால் தற்போதைய புதிய விதிமுறைப்படி அது நேரடியாக 82* ரன்கள் எடுத்த விராட் கோலியின் கணக்கில் 85* ரன்களாக சேர்க்கப்படும். மொத்தத்தில் அடிப்படை விதிமுறை பற்றிய விழிப்புணர்வு இல்லாத பாகிஸ்தான் ரசிகர்களை மீண்டும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து கலாய்த்து வருகின்றனர்.

Advertisement