ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை 2024 : கோப்பையை தக்க வைக்குமா அடுத்த இளம் படை.. நடப்பு சாம்பியன் இந்திய அணியின் அட்டவணை

ICC Under 19 World Cup
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்காலத்தில் அசத்தப் போகும் தரமான கிரிக்கெட் வீரர்களே முன்கூட்டியே அடையாளப்படுத்த உதவும் அண்டர்-19 உலகக்கோப்பை 2024 தொடர் அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் மொத்தம் 41 போட்டியில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன.

வரலாற்றில் 15வது முறையாக 2024 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்த 16 அணிகளும் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த 4 பிரிவுகளிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றிருக்கும். அதை தொடர்ந்து நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். அதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அந்த வகையில் லீக் சுற்றின் முடிவில் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை:
அந்த சுற்றில் 12 அணிகளும் தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒரு அணி குரூப் டி பிரிவில் 2, 3வது இடம் பிடித்த உங்களுக்கு எதிராக சூப்பர் 6 சுற்றில் 2 போட்டிகளில் விளையாடும். இந்த வகையில் சூப்பர் 6 சுற்றின் முடிவில் 2 பிரிவின் புள்ளி பட்டியலிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும்.

அதில் வெற்றி பெறும் 2 அணிகள் பிப்ரவரி 4ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய 5 வருடங்களில் முறையே முகமத் கைப், விராட் கோலி, உமுக் சந்த், பிரிதிவி ஷா, யாஷ் துள் தலைமையில் 5 கோப்பைகளை வென்ற இந்தியா அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கிறது. குறிப்பாக கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்ற இந்திய அணிக்கு இம்முறை இலங்கை மண்ணில் அடுத்த தலைமுறை வீரர்கள் வெற்றி பெற்று கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IND vs AUS : 2வது ஒன்டே நடைபெறும் இந்தியா கோட்டையான.. இந்தூர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

2024 அண்டர்-19 உலக கோப்பையில் இந்திய அணியின் லீக் சுற்று அட்டவணை:
1. ஜனவரி 14 : இந்தியா – வங்கதேசம்
2. ஜனவரி 18 : இந்தியா – அமெரிக்கா
3. ஜனவரி 20 : இந்தியா – அயர்லாந்து

Advertisement