WTC : ஐபிஎல் பரிசை மிஞ்சியதா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வின்னருக்கு ஐசிசி அறிவித்துள்ள பரிசு தொகை விவரம் இதோ

- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வருகையால் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வந்தது. அதை மாற்ற நினைத்த ஐசிசி நூற்றாண்டு பழமை வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் வகையில் அதற்கென்று பிரத்தியேகமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையை கடந்த 2019இல் அறிமுகப்படுத்தியது. அதாவது ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தால் கோப்பை கிடையாது மாறாக ஒவ்வொரு போட்டியிலும் வென்று புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து ஃபைனலில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முத்தமிட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

WTC

அதன் காரணமாக சமீப காலங்களில் பெரும்பாலான அணிகள் வெற்றிக்கு போராடுவதால் ட்ராவில் முடிவடையும் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் சமீபத்தில் இங்கிலாந்தை 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது போல டி20 கிரிக்கெட்டுக்கு நிகராக டெஸ்ட் போட்டிகளும் பரபரப்பாக நடைபெறுவதால் ரசிகர்கள் மீண்டும் ஆவலுடன் பார்க்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

பரிசுத்தொகை அறிவிப்பு:
அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா – இந்தியா ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் கோப்பையை நழுவ விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. இந்நிலையில் 2021 – 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு மொத்தமாக 3.8 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

IND vs AUS

1. அதன் படி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதும் மாபெரும் ஃபைனலில் வெற்றி வாகை சூடும் அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 1.6 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 13.22 கோடி பரிசாக கொடுக்கப்பட உள்ளது. சொல்லப்போனால் கடந்த ஃபைனலில் வென்ற நியூசிலாந்துக்கும் இதே 1.6 மில்லியன் டாலர் பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவாக இருந்ததால் நியூசிலாந்து வெறும் 6.61 கோடியை மட்டுமே பரிசாக வென்றது.

- Advertisement -

2. இருப்பினும் இம்முறையும் டாலருக்கு நிகரான மதிப்பில் அதே பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அதே போல ஃபைனலில் தோல்வியை சந்திக்கும் அணிக்கு 800,000 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் 6.61 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இதை ஐபிஎல் தொடருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடியும் ஃபைனலில் தோல்வியை சந்திக்கும் அணிக்கு 13 கோடியும் பரிசாக கொடுக்கப்படுகிறது.

WTC

3. அது போக ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளை தொடர்ந்து புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா 3.72 கோடியை பரிசாக பெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் 4வது இடம் பிடித்த இங்கிலாந்துக்கு சுமார் 2.90 கோடி பரிசு தொகையை பெற உள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : உள்ளூர் தொடர்களில் இருந்து தடை செய்யப்பட்ட மும்பை ஹீரோ ஆகாஷ் மத்வால் – இந்த கதை தெரியுமா? உங்களுக்கு

4. அந்த அணிகளுடன் 5வது இடம் பிடித்த இலங்கை 1.65 கோடியை பரிசாக வாங்க உள்ளது. ஆனால் கடந்த முறை கோப்பையை வென்ற நியூசிலாந்து இம்முறை சுமாராக செயல்பட்டு 6வது இடத்தை மட்டுமே பிடித்தது. அதே போல பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே 7, 8, 9 ஆகிய இடங்களை புள்ளி பட்டியலில் பிடித்தது. இருப்பினும் அந்த 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசை போல தலா 82.7 லட்சம் பரிசாக கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement