IPL 2023 : உள்ளூர் தொடர்களில் இருந்து தடை செய்யப்பட்ட மும்பை ஹீரோ ஆகாஷ் மத்வால் – இந்த கதை தெரியுமா? உங்களுக்கு

Akash-Madwal
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கலக்கி வரும் பல்வேறு இளம் வீரர்களுக்கு மத்தியில் தனது அற்புதமான பந்துவீச்சினால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான ஆகாஷ் மத்வால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுமட்டுமின்றி லக்னோ அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரே இரவில் ஹீரோவாகவும் மாறினார்.

Akash Madwal 1

மேலும் ஐ.பி.எல் வரலாற்றில் பிளே ஆப் சுற்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஆகாஷ் மத்வால் சாதனை படைத்தார். இப்படி ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் சீசனிலேயே தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு எளிதாக இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஏனெனில் பொறியியல் பட்டதாரியான அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்.சி.பி அணியில் நெட் பவுலராக இருந்திருந்தாலும் அவரை அந்த அணி ஏலத்தில் எடுக்கவில்லை. அதேவேளையில் அவரது திறமையை அறிந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஆண்டு அவரை நெட் பவுலராக அணியில் இணைத்ததோடு மட்டுமின்றி இந்த அவரை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஈழத்திலும் எடுத்திருந்தது.

Akash Madwal 2

இப்படி மும்பை அணியில் இடம்பிடித்திருந்த அவருக்கு இந்த சீஸனின் ஆரம்பத்தில் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது இந்த தொடரின் முக்கியமான இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஆகாஷ் மத்வாலை உள்ளூர் டென்னிஸ் பந்து தொடரில் தடை செய்யப்பட்ட கதையை அவரது உறவினர்கள் பகிர்ந்துள்ளனர். அந்தவகையில் அவர்கள் கூறியதாவது : ஆகாஷ் மத்வால் பொறியியல் படிப்பினை முடித்து வேலைக்கு சென்றிருந்தாலும் தினமும் அவரை வேலைக்கு போக விடாமல் உள்ளூர் டென்னிஸ் பந்து போட்டிகளில் விளையாட அவரது நண்பர்கள் அழைப்பார்கள். அதோடு அப்படி அவர் விளையாடுவதற்காக பணமும் வழங்குவார்கள்.

இதையும் படிங்க : வீடியோ : சேப்பாக்கம் மைதான பராமரிப்பாளர்களுக்கு ஆட்டோகிராப் மற்றும் பரிசுதொகை வழங்கிய தல தோனி

இப்படி அவர் தொடர்ச்சியாக டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடி வந்த வேளையில் அந்த சுத்து வட்டாரத்தில் அவர் மிகவும் பிரபலம் ஆனார். அதோடு நாளடைவில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள அனைவருமே பயந்தனர். அந்த அளவிற்கு நல்ல வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சு என அவர் கலக்கினார். அதனால் அவரை எதிர்த்து விளையாடுவது கஷ்டம் என எங்களது நகரை சுற்றி நடக்கும் எந்தவொரு டென்னிஸ் பந்து தொடரிலும் அவரை யாரும் விளையாட அனுமதிப்பதில்லை. அங்கிருந்து முன்னேறி தற்போது ஆகாஷ் மத்வால் ஐ.பி.எல் வரை சிறப்பாக முன்னேறியுள்ளார் என அவரது குடும்பத்தினர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement