2 ஆண்டுகளுக்கு பின்னர் ரோஹித் சர்மா அசத்தல்.. விராட் கோலியை மிஞ்சி புதிய சாதனை – வெளியான ரேங்கிங் இதோ

Rohit-Virat
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 29 மாதங்கள் கழித்து முதல் மூன்று இடங்களுக்குள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வந்துள்ளார். மேலும் இந்த இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் பந்துவீச்சு துறையில் முன்னேறியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா கடைசியாக 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் பங்கு பெற்றார். அதன் பிறகு தற்போது பல மாதங்கள் கழித்து இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்று வரும் தொடரில் அவர் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 122 ரன்கள் குவித்துள்ளதால் தற்போது 763 புள்ளிகள் பெற்று பேட்டிங் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார். அதே போன்று பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது சிராஜ் 662 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : 171/1 டூ 248/7.. இலங்கை கேப்டனின் ஆசையை தூளாக்கிய ரியான் பராக்.. அறிமுக போட்டியிலேயே மிரட்டல்

பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 816 புள்ளிகளிடம் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா வீரர்களான ஜாஷ் ஹேசல்வுட் இரண்டாவது இடத்திலும், ஆடம் ஜாம்பா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement