இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை சமன் செய்த இந்திய கிரிக்கெட் அணி 2வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் 3வது போட்டி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அத்துடன் முதலிரண்டு போட்டிகளைப் போலவே 3வது போட்டியின் பிட்ச் இருப்பதால் தங்களுடைய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் சதமடிப்பார் என்றும் அவர் உறுதியாக தெரிவித்திருந்தார். மறுபுறம் இந்திய அணியில் ரியான் பராக் அறிமுகமாக அறிமுகமாக விளையாடும் வாய்ப்பு பெற்றார். அதே போல விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
அசத்திய ரியான் பராக்:
அவர்கள் அணிக்குள் வந்ததால் கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிசாங்கா மற்றும் அவிஸ்கா பெர்னாண்டோ ஆகியோர் ஆரம்பத்திலேயே நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் நிசாங்கா 45 ரன்களில் அக்சர் பட்டேல் சுழலில் சிக்கினார்.
இருப்பினும் அடுத்ததாக வந்த குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பெர்னாண்டோ அரை சதமடித்து இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அவர் சதத்தை நெருங்கி தன்னுடைய கேப்டனின் சொல்லை காப்பாற்றத் தயாரானார்.
ஆனால் அப்போது சிறப்பாக பந்து வீசி அவரை 96 (102) ரன்களில் அவுட்டாக்கிய அறிமுக வீரர் ரியான் பராக் இலங்கை கேப்டனின் சதமடிக்கும் ஆசையை தூளாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த கேப்டன் அசலங்காவையும் 10 (12) ரன்களில் காலி செய்தார். அதற்கடுத்ததாக வந்த சமரவிக்கிரமாவை முதல் பந்திலேயே சிராஜ் கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்த லியனகே 8 ரன்னில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சுழலில் போல்டானார்.
இதையும் படிங்க: கவுதம் கம்பீர் எனக்கு அந்த விடயத்தில் நிறைய கத்து கொடுத்திருக்காரு – வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டி
அதைத் தொடர்ந்து வந்த வெல்லலாகே 2 ரன்களில் ரியான் பராக் சுழலில் போல்டானார். இறுதியில் மறுபுறம் நிதானமாக விளையாடிய குசால் மெண்டிஸ் அரை சதமடித்து 59 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் 23* ரன்களும் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இலங்கை 248/7 ரன்கள் எடுத்தது. குறிப்பாக 171/7 என்ற வலுவான துவக்கத்தை பெற்ற இலங்கையை 248/7க்கு கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ரியான் 9 பராக் 3 விக்கெட்டுகளை 6 என்ற எக்கனாமியில் எடுத்து மிரட்டினார்.



