கவுதம் கம்பீர் எனக்கு அந்த விடயத்தில் நிறைய கத்து கொடுத்திருக்காரு – வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டி

Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்தது. அந்தத் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி சமன் செய்த வேளையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்திற்கு முன்னர் பேசிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் : இது போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்து வரும் பெரிய தொடர்களுக்கு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கிடைக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்வது என்பது குறித்து நிறைய ஆலோசனைகளை நமது அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழங்கினார்.

- Advertisement -

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கடைசி போட்டியில் எங்களது அணுகு முறையில் சிறிய மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று அதே நம்பிக்கையுடன் அடுத்தடுத்து வரும் தொடர்களிலும் வெற்றி பெறுவோம் என வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சவால்விட்ட இலங்கை கேப்டன்.. 3வது போட்டியில் அறிமுகமான வீரர்.. 2 அதிரடி மாற்றங்களுடன் ரோஹித் பேட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement