இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த வேளையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் பங்கேற்று விளையாடியது. அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
2026 டி20 உலககோப்பையின் பெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்த ஐ.சி.சி :
மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரானது கடந்த இரண்டு மாதங்களாக மிகச் சிறப்பான பொழுதுபோக்கை வழங்கியது. பெரிய அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பல்வேறு இளம்வீரர்கள் எந்த தொடரில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்திருந்தனர். அதோடு இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியுமே மிகச்சிறப்பாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து இந்த தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது. அப்படி அவர்கள் வெளியிட்டுள்ள அணியில் : பாகிஸ்தான் வீரர் சாகிப்சதா பர்கான் மற்றும் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் துவக்க வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இஷான் கிஷனும், நான்காவது இடத்தில் கேப்டனாக எய்டன் மார்க்ரமும் இடம்பிடித்துள்ளனர்.
ஐந்தாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியா, ஆறாவது இடத்தில் வில் ஜாக்ஸ் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக இடம் பிடித்துள்ளனர். ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் ஜேசன் ஹோல்டர், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும், 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் லுங்கி நெகிடி, அடில் ரஷித் ஆகியோரும், 11-வது வீரராக முசாரபானியும் இடம் பெற்றுள்ளனர். 12-வது இடத்தில் வான் ஸ்கால்விக்கும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்த கோப்பை மட்டும் எனக்கு போதாது.. எங்களோட அடுத்த டார்கெட் இதுதான் – சூரியகுமார் யாதவ் அதிரடி
ஐ.சி.சி வெளியிட்ட பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ : 1) சாகிப்சதா பர்கான், 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) எய்டன் மார்க்ரம் (கேப்டன்), 5) ஹார்டிக் பாண்டியா, 6) வில் ஜாக்ஸ், 7) ஜேசன் ஹோல்டர், 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) லுங்கி நெகிடி, 10) அடில் ரஷீத், 11) முசாரபானி, 12) வான் ஸ்கால்விக்.



