இந்த கோப்பை மட்டும் எனக்கு போதாது.. எங்களோட அடுத்த டார்கெட் இதுதான் – சூரியகுமார் யாதவ் அதிரடி

Suryakumar
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை போட்டிகளின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பையை கைப்பற்றியிருந்த வேளையில் மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது.

எங்களுடைய அடுத்த இலக்கு இதுதான் : சூரியகுமார் யாதவ்

இந்த வெற்றியின் மூலம் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் ரசிகர்களும் இந்த வெற்றியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் அடைந்து வெற்றிக்கு பிறகு தனது அடுத்த குறிக்கோள் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : 2024 ஆம் ஆண்டு கோப்பை வென்ற பிறகு ஜெய்ஷா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் என்னை நம்பி கேப்டன் பொறுப்பை வழங்கினார்கள்.

- Advertisement -

தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நான் மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி அவர்களது நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொண்டு முற்றிலும் வேறு மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். எங்களுடைய தற்போதைய டி20 அணி ஒரு அற்புதமான அணியாக இருக்கிறது.

நமது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பான வீரர்களாக இருக்கின்றனர். 2025-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். தற்போது 2026-ல் சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளோம். எனவே இந்த வெற்றி பயணத்தை நிறுத்திக் கொள்ளாமல் அடுத்ததாக 2027, 28, 29 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் எங்களது வெற்றி பயணத்தை தொடர விரும்புகிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : கபில் தேவ், தோனி, ரோஹித்துக்கு அடுத்து 4 ஆவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் – பெற்ற கவுரவம்

அடுத்த 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது எங்களது அடுத்த இலக்கு. அதேபோன்று அதே ஆண்டு டி20 உலக கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது அதையும் வெல்ல வேண்டும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement